Chapter 20

2K 78 27
                                    

பெங்களூர் வாழ்க்கையில் ருத்ரனுடன் யாழினியும் ஒன்றிப் போக, நாட்கள் வேகமாகவும் மகிழ்ச்சியாகவும் சென்றது. ருத்ரன் அலுவலக நேரம் தவிர மற்ற நேரங்களில் யாழினியுடன் செலவிட்டான். அவன் வேலை நேரத்தில், மாமனார் மாமியார், தந்தை, மற்றும் தோழிகளுடன் கைபேசியில் பேசிக்கொண்டிருப்பாள்; அருகில் இருக்கும் அங்காடிக்கு சென்று சமையலுக்கு தேவையானதை வாங்குவாள்; படங்கள் மற்றும் கைவினைப் பொருட்கள் என்று நேரம் செலவிடுவாள். மொத்தத்தில் வாழ்க்கை இலகுவாக சென்று கொண்டிருந்தது.

அன்று வழக்கம் போல அங்காடிக்கு சென்று தேவையானதை வாங்கி கொண்டு வந்து கொண்டிருந்தாள் யாழினி. யாரோ தன்னை அழைப்பது போல இருக்க திரும்பி பார்த்தாள். கல்லூரியில் இளங்கலை (undergraduation) வகுப்பில் யாழினி உடன் ஒன்றாக படித்த ஸ்ருஷ்டி நின்று கொண்டிருந்தாள்.

“ ஸ்ருஷ்டி நீயா! இங்கே என்ன செய்கிறாய்? என்ன ஆளே மாறிவிட்டாய்! அடையாளமே தெரியவில்லை!”

“உன்னுடைய எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன் யாழினி, எங்கும் ஓடி விடமாட்டேன், பொறு! நீ என்ன செய்கிறாய் இங்கே? சென்னையில் தானே ஏதோ கல்லூரியில் வேலை செய்து கொண்டிருந்தாய்?”

“என்னடி நான் கேள்வி கேட்டால் நீ பதில் சொல்லாமல் என்னிடம் கேட்கிறாய்! என் கணவருக்கு தற்காலிக மாற்றம் பெங்களூருக்கு; கல்லூரியிலும் கோடை விடுமுறை, அதான் இங்கே வந்து விட்டேன்”

“இராமன் இருக்கும் இடம் சீதைக்கு அயோத்தியா! நடத்து நடத்து!”

“உனக்கு வாய் மட்டும் குறையவில்லை, இப்போது வேலை எதுவும் இல்லை என்றால் என்னோடு வீட்டிற்கு வருகிறாயா? சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கலாம் ஸ்ருஷ்டி”

“என்னுடைய வேலை நேரம் முடிந்து விட்டது, தனியாக தான் இருக்கிறேன்; என் ஒருத்திக்கு வீட்டு வேலை என்ன இருக்க போகிறது! எனக்கும் உன்னோடு பேச வேண்டும், வா போகலாம்”

அங்காடிக்கு அருகிலேயே வீடு என்பதால் நடந்தே வந்து விட்டனர் இருவரும். ஸ்ருஷ்டியை வரவேற்று உட்கார வைத்து சுட சுட டிகிரி காப்பியும் வீட்டிலேயே செய்த கோதுமை பிஸ்கட்டும் கொடுத்தாள் யாழினி. சிறிது நேரம் கல்லூரி நாட்களை பற்றி பேசி கொண்டிருந்தார்கள்.

தோயும் மது நீ எனக்கு(Edited)Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ