Chapter 2

6.9K 124 24
                                    

அழகான அதிகாலை நேரம்.செக்கச்செவந்த வானம்.ஆங்காங்கே
மரக்கிளைகளில் பறவைகள்
தம் ஜோடிகளுடன் கொஞ்சி குலாவிக்கொண்டிருந்தன.இந்த அழகான அதிகாலை நேரத்தில் வீட்டுவாசலில் பெண்கள் கோலமிடுவதே தனி அழகு.நகர வாழ்க்கையில் இதை காண்பதே அரிதாகிவிட்டது.இயந்திரமாக ஓடிக்கொண்டிருக்கும் நகர மக்களுக்கு இதையெல்லாம் நினைப்பதற்கே நேரமில்லை.
கானம் பாடி ஆதவனை எழுப்பிய பறவைகளுக்கு ஏனோ நம் நாயகியை எழுப்ப மனம் வரவில்லை போலும்.தலையணையை கட்டியணைத்தவாறு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தால் யாழினி.நம் நாயகி எழுவதற்குள் அவளைப்பற்றி பார்த்து விடுவோம்.
யாழினி! தொண்ணூறுகளின் ஏதோ ஒரு நடிகையின் முகச்சாயல்.நல்ல களையான முகம்.மாநிறத்திற்கும் சற்று அதிகமான நிறம்.அளவான உடலமைப்பு.பார்ப்பவர்களை திரும்பி பார்க்க வைக்கும் சற்று நீளமான கண்கள்.உயரம் தான் சற்றுக்குறைவு,ஐந்தடி!
சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் வணிகவியல் முதுகலை(M.com) முதலாம் ஆண்டுப் படித்துக்கொண்டிருக்கிறாள்.படிப்பில் கெட்டிக்காரி.அதே துறையில் பேராசிரியராக வேண்டும் என்பதே அவள் இலட்சியம்.
கஜேந்திரன்! யாழினியின் தந்தை.மத்திய அரசு அலுவலர்.மகளின் மேல் உயிரையே வைத்திருப்பவர்.யாழினிக்கும் தந்தை தான் சகலமும்.அன்னை லட்சுமி யாழினிக்கு பதினொரு வயதிருக்கும் போது விபத்து ஒன்றில் காலமாகிவிட்டார்.
யாழினியின் தம்பி பாலா. தனியார் கல்லூரி ஒன்றில் வணிகவியல் இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கிறான்.இயல்பிலேயே பிடிவாதமும் மூர்க்கத்தனமான கோபமும் கொண்டவன்.ஆனாலும் கஜேந்திரனுக்கு மகன் மேல் தனிப்பிரியம்.
நாயகியைப் பற்றி பார்த்துவிட்டோம், நம் நாயகனைப் பற்றி பார்க்க வேண்டும் அல்லவா!
மும்பை மாநகரத்தின் போக்குவரத்து சத்தத்தில் சற்று முன்னரே எழுந்து விட்டான் ருத்ரன்.கைகளை உயர்த்தி சோம்பல் முறித்தான்.நல்ல அஜாகுபானுவான உடல்.ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவன் என்பது அவன் உடலைப் பார்த்தாலே தெரியும்.தினமும் உடற்பயிற்சி செய்பவன்.சென்னை தனியார் கல்லூரி ஒன்றில் பொறியியல் படித்து முடித்து தனியார் நிறுவனம் ஒன்றில் அவன் திறமைக்கேற்ற சம்பளத்தில் வேலைச்செய்கிறான்.பணி இடமாற்றத்தால் ஆறுமாதங்களுக்கு முன்பு தான் மும்பை மாநகரத்திற்கு வந்தான்.தனியே அறை எடுத்துத்தங்கி வேலைக்குச் செல்கிறான்.எந்நேரமும் போக்குவரத்து நெரிசலும், தூய்மை என்றால் என்ன என்று கேட்கும் மும்பை நகரத்தை துளியும் பிடிக்கவில்லை ருத்ரனுக்கு.
தந்தை தேவன், மத்திய அரசின் நிறுவனம் ஒன்றில் வேலை செய்கிறார்.தாயார் இளமதி, தனியார் பள்ளி ஒன்றில் பொருளாதார ஆசிரியை.ருத்ரனின் தம்பி இந்திரன், தனியார் கல்லூரியில் பொறியியல் மூன்றாம் ஆண்டு படிக்கிறான்.
ருத்ரன்! தன்னைப்போலவே பிறரிடமும் நியாயத்தையும் நேர்மையையும் எதிர்ப்பார்ப்பவன்.தேவைக்கேற்ப அளந்து பேசுபவன்.பெயருக்கு ஏற்றாற்போல் கோபக்காரன்.எதையும் பார்க்கும் விதம் பிறரை விட வித்தியாசமானது.
யாழினி! பெயருக்கு ஏற்றாற்போல் இனிமையானவள். தந்தைக்கேற்ற மகள்.வாய் ஓயாமல் பேசுபவள்.எந்நேரமும் மானைப்போல் துள்ளிக்குதிப்பவள்.ஆனால் வீட்டிற்க்கு மூத்தப்பெண்ணாக பொறுப்பாக நடந்து கொள்வாள்.மூக்கு நுனிச்சிவக்கும் அளவிற்கு கோபம் வரும்;ஆனால் அதில் ஒரு நியாயமிருக்கும்.
இரு துருவங்களாக இருக்கும் இவர்களுக்குள் காதல் மலருமா?
மலரும் காதல் மணக்குமா?
இவர்களது காதல் பயணத்தில் நாமும் உடன் பயணிப்போம்.

தோயும் மது நீ எனக்கு(Edited)Onde histórias criam vida. Descubra agora