Chapter 11

1.9K 78 18
                                    

"அது வந்து" என்று ருத்ரன் வேண்டும் என்றே இழுத்து ராகம் பாட,அந்தப் பக்கம் அமைதியாகவே இருக்க,தன் விளையாட்டை நிறுத்திக் கொண்டு "இனி உன் கூட சென்னையில் தான் இருப்பேன் அழகி" என்று கொஞ்சி கூறினான்.
யாழினியிடம் இருந்து எந்த பதிலும் வராமல் இருக்க,"கண்ணம்மா" என்று ருத்ரன் மெதுவாக அழைத்தான்.

அவ்வளவு தான்,அடங்க மறுத்த அழுகை பீறிட்டு வர,அவளின் அழுகை அவன் மனதை பிசைய,"என்னவாயிற்று கண்ணம்மா? எதற்கு அழுகிறாய்?" என்று அவன் கேட்க இன்னும் அதிகமாக அழுதாள் யாழினி.
காரணம் புரியாமல் தவித்தவன்,"அழாதடி கண்ணம்மா,என்னவாயிற்று சொல்லு” என்று பதற்றமாக கேட்க,அதை உணர்ந்து "உங்களை பார்க்காமல் இருப்பது எவ்வளவு வருத்தமாக இருக்கிறது தெரியுமா? இனிமேல் என் கூடவே இருக்கப்போகிறீர்கள் மாமா,அதனால் தான் இத்தனை நாட்களின் ஏக்கத்தின் வெளிப்பாடாக அழுகை வந்துவிட்டது" என்று விசும்பலோடு கூறினாள் யாழினி.

பெருமூச்சு விட்டவன் அவளது காதலில் நெகிழ்ந்து "அடியே அழகி,எனக்கு மட்டும் ஏக்கம் இல்லையா? உன்னை மாதிரி எனக்கு காதலை வெளிப்படுத்த தெரியாதடி,ஆனால் நீ தான் என் உயிர் கண்ணம்மா" என்று நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் தன் ஆழ் மனது காதலை வெளிப்படுத்தினான் ருத்ரன்.அவனது வார்த்தைகளில் சிலிர்த்து போக,அமைதியாக அவன் கூறியதை ரசித்துக் கொண்டிருக்க,ருத்ரனோ அந்த நேரத்தை சுகமாக உணர்ந்து அமைதியாக இருந்தான்.சில நேரத்தில் ஆர்ப்பரிக்கும் வார்த்தைகளால் வரும் அமைதி அழகானது;ஆழமானது.

நாட்கள் செல்ல ருத்ரன் சென்னை வந்து சேர்ந்தான்.இரண்டு மாதங்களுக்கு பிறகு ருத்ரனை பார்க்கப் போகும் சந்தோசத்தில் இருந்தாள் யாழினி.அதே எக்மோர் இரயில் நிலையத்திற்கு வரச்சொல்லி இருந்தான் ருத்ரன்.ருத்ரன் முன்னரே வந்ததால் யாழினிக்காக ஆவலாக காத்திருந்தான்.அவளை காண ஏங்கியவன் நேற்று இருவரும் பேசியதை நினைத்து பார்த்தான்.

"மாமா,நாளைக்கு எங்கே வர வேண்டும்"
"எக்மோர் இரயில் நிலையத்திற்கே வந்துவிடு கண்ணம்மா"
"சரி மாமா,உங்களுக்காக ஒரு இன்ப அதிர்ச்சி இருக்கிறது மாமா"
"என்ன அது அழகி"
"ம்ம்ம்...இப்பவே சொல்ல வேண்டுமா இல்லை நாளை சொல்லட்டுமா?" என்று அவனுக்கு தெரியாமல் இருக்க வேண்டும் என்பதை மறந்து அவள் கேட்க,அவளது குழந்தைதனத்தை நினைத்து ரசித்து சிரித்தான் ருத்ரன்.
"இப்பவே சொல்லுடி அழகி"
"நாளைக்கு மாமாவை பார்க்க புடவையில் வரப்போகிறேனே"
"உண்மையாகவா கண்ணம்மா" என்று ஆவலாக கேட்டான்.
"ஆமாம் மாமா" என்று யாழினி வெட்கத்துடன் கூற
"சீக்கிரமாக வந்து காத்துக்கொண்டிருப்பேன், என் கண்ணம்மாவை பார்ப்பதற்காக" என்று கொஞ்சலாக கூறினான் ருத்ரன்.

தோயும் மது நீ எனக்கு(Edited)Onde histórias criam vida. Descubra agora