நாட்கள் செல்ல இவர்களது காதலும் வளர்ந்தது.ருத்ரனின் அன்றாட தேவையாக யாழினி மாறி போனாள்.யாழினிக்கோ ருத்ரன் உயிர் மூச்சாக மாறி போனான்.தாயை இழந்த யாழினிக்கு அவளது ருத்ரனே தாயாக இருந்து தாங்கினான்.ஆனால் காதலில் இனிப்பை மட்டுமே உணர்ந்தவர்கள் எவரும் இல்லையே!
அன்று ருத்ரனுக்கு வேலையில் பிரச்சனை காரணமாக இறுக்கமாகவும் கோபமாகவும் இருந்தான்.மதிய உணவு போது யாழினியிடம் பேசுவது ருத்ரனின் வழக்கம்.உணவை முடித்துக் கொண்டு யாழினியை அழைத்தான்.
"ஓய்!சாப்பிட்டீங்களா மாமா?"
"ம்ம்ம் சாப்பிட்டேன்,நீ?"
"இனிமே தான் மாமா,கொஞ்சம் நேரம் ஆகும்"
"ஓ!சரி,வேறு என்ன?"
"என்னவாயிற்று மாமா? ஏதோ மாதிரி பேசுகிறீர்கள்?"
"வேலையில் பிரச்சனை,அதனால் தான்"
"அப்படியா மாமா,ஒன்றுமில்லை சரியாகிவிடும்"
"ம்ம்ம்"
என்றும் போல் இல்லாமல் ருத்ரன் இறுக்கமாக இருக்க யாழினிக்கு அவனிடம் என்ன பேசுவது? எப்படி அவனை சகஜமாக பேச வைப்பது என்று புரியாமல் விழித்தாள்.அவள் அடுத்து பேசுவதற்குள்,ருத்ரனுக்கு இன்னொரு அழைப்பு வர,"நண்பன் ஒருவன் அழைக்கிறான் யாழினி,நீ சற்று காத்திரு,பேசிவிட்டு வருகிறேன்" என்று கூற,அதற்குள் அழைப்பு துண்டிக்கப்படவே,மீண்டும் யாழினியின் அழைப்புக்கு வந்தான்.
"நீ சொல்லு யாழினி"
"அதற்குள் பேசி விட்டீர்களா மாமா?"
"இல்லை,அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது"
"நீங்கள் வேண்டுமானாலும் பேசிவிட்டு வாருங்கள் மாமா"
"பரவாயில்லை நீ சொல்லு"
"இல்லை மாமா,ஏதாவது அவசரமாக இருக்க போகிறது,நீங்கள் பேசிவிட்டு வாருங்கள்" என்று அவள் மீண்டும் கூற,ஏற்கனவே கோபமாக இருந்தவன்,மேலும் கடுப்பாகி,"நான் தான் சொல்கிறேன் அல்லவா பரவாயில்லை என்று,திரும்ப திரும்ப அதையே சொல்லி என் கோபத்தை தூண்டுகிறாய்,உன்னோடு பேசினால் மனம் அமைதியாகும் என்று வந்ததற்கு என்னை தான் நொந்து கொள்ள வேண்டும்" என்று கோபமாக பேச
"இல்லை மாமா,நான்..." என்று யாழினியால் பேச முடியாமல் அழுகை வர,"நான் பிறகு பேசுகிறேன்" என்று ருத்ரன் அழைப்பை துண்டித்து விட்டான்.
YOU ARE READING
தோயும் மது நீ எனக்கு(Edited)
Romanceவேண்டாம் என்று நினைத்தாலும் நம்மையே சுற்றி வரும் காதலும் ஒருவகை போதையே!