நெஞ்சம் பட படக்க கீழே இறங்கியவள், இரயில் நிலையத்திற்கு வெளியே வந்தாள்.சாலைக்கு அந்தப் பக்கம் நிற்பதாக ருத்ரன் குறுஞ்செய்தி அனுப்பவே,சாலையை கடந்து மறுபுறம் சென்றாள்.எங்கு இருக்கிறான் என்று யாழினி தேட,இடதுபுறம் இருசக்கர வாகனத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தான் ருத்ரன்.அவனைக் கண்டதும் இதயம் ஓட்டப்பந்தயத்தில் ஓடுவது போல் வேகமாக துடிக்க,மெதுவாக அவனை நோக்கிச் சென்றாள்.
ருத்ரன் யாழினிக்கு முதுகு காட்டி அமர்ந்திருந்ததால் அவள் வந்ததை அவன் கவனிக்கவில்லை.அவனுக்கு பின்னால் நின்று கொண்டிருந்த யாழினிக்கு அவனைக் கூப்பிட நினைத்தாலும் வாயிலிருந்து காத்து தான் வந்தது.ருத்ரனின் கண்களோ யாழினியை தான் ஆவலாக தேடிக் கொண்டிருந்தது.பொறுமை இழந்தவனாக யாழினியின் கைபேசிக்கு அழைக்க நினைக்க,தற்செயலாக திரும்பி பார்த்தான்.அவன் தீடீரென திரும்பிய பதற்றத்தில் யாழினி எங்கோ பார்ப்பது போல் பார்க்க,தன்னை தான் தேடுகிறாள் என நினைத்து “ஹே! யாழினி” என்றுக் கூப்பிட்டான் ருத்ரன்.
அப்போது தான் அவனை கவனிப்பது போல்,“ஓய் ருத்ரா!” என்று சிரித்துக் கொண்டே அவன் பக்கத்தில் வந்தாள்.
“எவ்வளவு நேரமாக தேடுகிறேன் தெரியுமா அழகி,சரி வண்டியில் ஏறு;போக்குவரத்து நெரிசல் ஆகிறது பார்” என்று ருத்ரன் கூற,அவன் பின்னால் ஏறிக்கொண்டாள்.அவன் மேல் படாமல் நகர்ந்து அமர,“பந்தயத்தில் நீ தோற்று விடுவாய் யாழினி” என்று சிரித்துக் கொண்டே கூறினான்.அவன் கூறியதைக் கேட்டவள், நேற்று இரவு பேசியதை நினைத்து பார்த்தாள்.“மாமா,நாளைக்கு உங்களை பார்க்க போகிறேனே!ஓரே பதட்டமா இருக்கிறது மாமா”
“எனக்கும் தானடி அழகி,வண்டியில் கீழே விழாமல் உட்கார தெரியுமா கண்ணம்மா? என்னை வேண்டுமானாலும் இறுக்கமாக பிடித்துகொள்” என்று அவளைச் சீண்ட
“உங்கள் மேல் துளி கூட படாமல் உட்கார்ந்தபடி வருவேன் பாருங்கள் மாமா”
“அப்படியா அழகி!”
“அப்படிதான்! பந்தயமே வைத்து கொள்ளலாம் மாமா,நான் தோற்று விட்டால் நீங்கள் என்ன சொன்னாலும் செய்வேன்;நீங்கள் தோற்று விட்டால் நான் என்ன சொன்னாலும் செய்ய வேண்டும்.நீங்கள் தயாரா மாமா?”
“நான் தயார் தான்,நீ தான் தோற்ற போக போகிறாய் கண்ணம்மா”
“அதை நாளைக்கு பார்க்கலாம் மாமா”.

ŞİMDİ OKUDUĞUN
தோயும் மது நீ எனக்கு(Edited)
Romantizmவேண்டாம் என்று நினைத்தாலும் நம்மையே சுற்றி வரும் காதலும் ஒருவகை போதையே!