Chapter 19

1.7K 67 35
                                    

அவசரமாக குளித்து விட்டு தயாராகி வீட்டு சாவியை தேடியபோது தற்செயலாக கண்கள் நாள்காட்டியை பார்த்தது. இன்றோடு பெங்களூர் வந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது. வேலை நேரத்தை தவிர மற்ற நேரங்களில் யாழினியை மனம் தேடியது. மனம் அவளது பேச்சு, சிரிப்பு, அழுகை, வாசம், முத்தம் என அனைத்திற்கும் ஏங்கியது. அவனது கோபம் அதிகப்படியாக தோன்றினாலும், தன் கோபம் யாழினிக்கு நிச்சயம் புரிய வைக்கும் என்று நம்பினான் ருத்ரன். யாழினியின் நினைவுகளில் சில நிமிடங்கள் கரைய, கடிகாரத்தின் ஒலியில் தன்னிலை மீண்டு சாவியை தேடி பூட்டிக்கொண்டு அலுவகத்திற்கு கிளம்பினான்.

இயந்திரத்தனமாக வேலை செய்ததில் நேரம் போனதே தெரியவில்லை ருத்ரனுக்கு! ஒரு வழியாக வேலைகளும் முடியவே, அலுவலக உணவகத்திலேயே இரவு உணவை முடித்துக் கொண்டு வீடு திரும்பினான். மாடிப்படியில் யாரோ உட்கார்ந்து இருப்பது போல் நிழல் தெரியவே, யாரென்று எட்டிப் பார்த்தான். கோபம் சட்டென்று வர, வேகமாக கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான் ருத்ரன்.

இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டு அவன் திரும்பி நின்று கொண்டிருந்தான். இரு கைகள் அவனைப் பின்புறத்தில் இருந்து அணைத்துக் கொண்டது. அவனது முதுகு பகுதியில் ஈரமாக உணர, அணைத்த கைகளை பிடித்து முன்புறம் இழுத்து நிறுத்தினான். கண்கள் கலங்கி அழுது வீங்கிய முகத்துடன் அவனையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள் யாழினி.

அவனது கோபத்தை எவ்வாறு சமாதானம் செய்வது அவள் கலங்கி நின்று கொண்டிருக்க, அவளது கண்களையே சில நொடிகள் உற்றுப் பார்த்தவன், அவளை இறுக அணைத்து கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டான். அவனது அணைப்பை எதிர்ப்பாராதவள் சற்று தடுமாற, சில நொடிகளில் தன்னை அவனுள் புதைத்துக் கொண்டாள்.

எவ்வளவு நிமிடங்கள் கரைந்ததோ, தன்னிடமிருந்து யாழினியை விலக்கிவிட்டு அமைதியாக சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டான் ருத்ரன். அவன் முன் சென்று மண்டியிட்டு அமர்ந்தவள், அவனது முகத்தை கைகளில் ஏந்தி கொண்டு கண்கள் கலங்க அவனையே பார்த்தாள்.
"எதற்காக வந்தாய் இப்போது மட்டும்?"

தோயும் மது நீ எனக்கு(Edited)Where stories live. Discover now