( ஓய்வு நேரத்தில் எழுதலாம் என்று ஆரம்பித்தேன், இப்போது ஓய்வு நேரம் கிடைக்க காத்திருக்க வேண்டி உள்ளது. ஆதரவும் எதிர்ப்பார்த்த அளவு கிடைக்கவில்லை. ஆனாலும் என் பதிவிற்காக காத்திருக்கும் அன்பு வாசகர்களுக்கு இனிமேல் தவறாமல் பதிவுகளை போடுவேன். தாமதத்திற்கு மன்னிக்கவும்)
எங்கும் பச்சை பசலென்று குளுமையாக இருந்தது ஏற்காடு. சேலம் வரை முதல் வகுப்பு பெட்டியில் இரயிலில் பயணித்து, பின்னர் பேருந்தில் ஏற்காடு வந்து சேர்ந்தார்கள் யாழினியும் ருத்ரனும். வாடகை வண்டியில் தந்தை ஏற்பாடு செய்திருந்த குடிலுக்கு வந்தார்கள். சற்று பெரிய குடிலாக இருந்தது; வசதியாகவும் இருந்தது. பயணக் களைப்பு தீர இருவரும் குளித்து விட்டு ஊரைச் சுற்றிப்பார்த்து வர கிளம்பினார்கள்.
காலை வேளையிலும் ஏற்காடு குளிராகவே இருந்தது. சுற்றுலா இடங்களுக்கு செல்ல வாடகைக்கு வண்டி ஏற்பாடு செய்திருந்தனர். யாழினியை தோளோடு அணைத்துக் கொண்டு ஏற்காட்டின் குளிரை அனுபவித்த படி வந்தான் ருத்ரன். முதலில் சேவராய் கோயிலுக்கு சென்று இறைவனை நிறைவாக தரிசித்து விட்டு, அருகில் இருந்த சேவராய் மலைக்கு சென்றனர்.
சேவராய் மலை பிரதேசம் அதிகப்படியான குளிரை உள்ளடக்கி இருந்தது. சுற்றிலும் பச்சை பசலென்று பார்வைக்கு இதமாக காட்சியளித்தது. கண்களில் ஆசைப் பொங்க பார்த்துக் கொண்டிருந்த யாழினியை விழுங்கி விடுவது போல் ரசித்துக் கொண்டிருந்தான் ருத்ரன். பலவிதமாக யாழினியோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு, அங்கிருந்து ஏற்காடு ஏரிக்கு அழைத்துச் சென்றான் ருத்ரன்.
BINABASA MO ANG
தோயும் மது நீ எனக்கு(Edited)
Romanceவேண்டாம் என்று நினைத்தாலும் நம்மையே சுற்றி வரும் காதலும் ஒருவகை போதையே!