கதை-விதை-கவிதை
இரவு வானில் பாதிநிலவு பூத்திருந்தது. மஹிமா தன் வீட்டு மாடியில் நின்று யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.
'விஷ்வாவிடம் அப்படிப் பேசியிருக்கக் கூடாதோ...?'
'ப்ச்.. எப்போதும் எல்லா நேரத்திலும் நம்மைப் பற்றி அவனிடம் சொல்ல வேண்டுமா? நமக்கென்று தனியான ரகசியங்கள் இருக்கக் கூடாதா?'
'அவன் நம் நண்பன் தானே? அவனுக்குத் தெரிந்தால் என்ன?'
'அட.. கதையை எழுதிவிட்டு அவனிடம் காட்டிவிடலாம். என்ன இப்போது!?'
மனதுக்குள் வாக்குவாதம் செய்தவாறே பால்கனியில் நின்று நிலாவை ரசித்தவளை, பங்கஜம் அம்மாள் வந்து சாப்பிட அழைத்தார். வேண்டாம் என்று சொல்ல மனதின்றி அவருடன் சாப்பாட்டு மேசைக்குச் சென்றாள் படியிறங்கி.
"உனக்குப் புடிக்கும்னு தோசையும் கொத்துமல்லி சட்னியும் செஞ்சேன் பாப்பா.. மூணு தோசையாச்சும் சாப்பிட்டே ஆகணும், ஆமா!!"
"மூணுக்கெல்லாம் இடம் இல்ல பங்கஜம்மா! ஒண்ணு போதும்!!"
"ப்ச்.. தட்டைத் தொடறதுக்கு முன்னாலவே போதும்னு சொல்லக் கூடாது. பேசாம சாப்பிடு!"
சரியாக முதல் விள்ளல் தோசையை சட்டினியில் நனைத்து வாயருகே கொண்டு செல்கையில் லேண்ட் லைன் அலைபேசி அடித்தது. எழ எத்தனித்தவளைப் பார்வையால் அடக்கி அமரச் செய்துவிட்டு, பங்கஜம் அம்மாள் சென்று அதை எடுத்தார்.
ராஜகோபால் தான் மும்பையிலிருந்து அழைத்திருந்தார். ஓரிரு வார்த்தை பேசிவிட்டு பங்கஜம் வந்து மஹிமாவிடம் அலைபேசியைக் கொடுத்தார். இடது கையால் வாங்கிக் காதில் வைத்தாள் அவளும்.
"ஹலோ அப்பா.."
"மஹிம்மா...என்னடா பண்றே?"
"சாப்பிட உட்கார்ந்தேன்பா. கரெக்டா நீங்க கூப்டறீங்க"
YOU ARE READING
மெய்மறந்து நின்றேனே
Romanceபெண்ணின் மனதைத் தொட்டு கண்ணாமூச்சி ஆடும் காதல்... காதலின் பரிணாமங்களை நாயகி மூலம் நாமும் அறிந்து கொள்வோம்.