26

1.8K 89 8
                                    

கனிமொழியே


மாலை நான்கு மணி.

அந்த ஏர் இந்தியா விமானம் விண்ணில் வெண்ணிறப் புறாவாய்ப் பறந்து வந்து டில்லி மண்ணீல் ஆங்காரமாய் சத்தமிட்டு இறங்கியது. உள்ளிருந்த நூற்றைம்பது பேரையும் பத்திரமாகத் தரையிறக்கி விட்டனர் உள்ளிருந்த பணிப்பெண்கள். இறங்கிய பயணிகள் அனைவரும் அவரவர் சாமான்களை, பைகளைத் தேடி conveyor belt பக்கம் ஓடினர்.

அவர்களுடன் சென்று தன் பைகளை எடுத்துக் கொண்டு தன் பெரியதாத்தா வீட்டிலிருந்து யாராவது வந்திருக்கின்றனரா என்று பார்த்தவாறு வெளியே நடந்தாள் மஹிமா. அவளுக்கு அதிகம் வேலை வைக்காமல் அவளெதிரில் வந்து நின்றார் சங்கரன்.

"மஹி கண்ணா!"

"சங்கர் மாமா!!"

ஓடிச்சென்று அவரையும் அத்தையையும் அணைத்துக் கொண்டாள் மஹி.

"ட்ராவல் எல்லாம் எப்டி இருந்தது கண்ணா?"

"எனக்கென்ன மாமா...பிஸினஸ் க்ளாஸ் டிக்கெட்..வழியெல்லாம் ஜூஸ், சாக்லேட், சாலட்னு குடுத்துகிட்டே இருந்தாங்க!"

"அப்போ வீட்டிற்கு கால் பண்ணி சாப்பாடு செய்யவேணாம்னு சொல்லிடலாமா?"

"அச்சச்சோ!!", மஹி பொய்யாக அலற, சிரித்தனர் இருவரும்.

"சரி...நீதான் வெளிநாட்டு படிப்பெல்லாம் வேணாம்னு எப்போதும் சொல்லுவியே... இப்ப என்ன?"

அவள் அமைதியாக இருக்கவும், அத்தை அவளுக்குப் பரிந்து பேசினார்.

"சும்மா இருங்க, ஒரு தடவை சொன்னா, அதையவே வாழ்க்கை ஃபுல்லா கடைபிடிக்கணுமா? அவளுக்கு ஏதோ ஆசை, படிச்சிட்டுப் போறா."

சரியென்று தலையசைத்துவிட்டு நடந்தார் மாமா.

அவர்களோடு நடந்து காருக்குச் செல்கையில், அவள் கைபேசி அடித்தது.

ஜோஷி.

ஆர்வமாக எடுத்தாள் அவள்.

"ஹலோ ஜோஷி, what a surprise!"

மெய்மறந்து நின்றேனேWhere stories live. Discover now