காதல் கசக்குதய்யா
எல்லாக் காதலும் கதைகளில் வருவதுபோல் டூயட் பாடுவது, வசனம் பேசுவது, கட்டியணைத்து முத்தம் தருவது என்று மட்டுமே இருப்பதில்லையே...
நிதர்சனங்களை ஏற்றுக்கொள்ளத் தெரிந்தால் மட்டுமே காதலிக்க முடியும். அது இன்றி, தாம் எதிர்பார்த்தவை மட்டுமே காதலில் நிகழவேண்டும் என்று எண்ணினால்?? என்ன நடக்கும்?? முதிர்ச்சி இல்லாத காதல் சாத்தியமா??
கனவு போல சென்று கொண்டிருந்தது மஹிமா-விஷ்வா காதல் வாழ்க்கை. ஆனால் கனவுகள் வருவதும் காலையில் கலைவதும் தவிர்க்க முடியாததாயிற்றே!
"மஹி... இன்னிக்கு ஈவ்னிங் அஞ்சு மணிக்கு நாம ரெண்டு பேரும் Phoenix mall போறோம். ஓகே தானே?"
முதல் பாடவேளை முடிந்த இடைவேளையில் அவளருகில் வந்து அமர்ந்திருந்தான் விஷ்வா.
"ஹேய்... போன க்ளாஸ் என்னத்த கவனிச்ச? இன்னும் மூணு நாள்ல அந்த projectஅ முடிச்சு சம்மிட் பண்ணனும்னு சார் சொன்னரே... கேக்கல?"
புத்தகத்திலிருந்து கண்ணை எடுக்காமல் கேட்டாள் அவள்."Come on... Projects வரும் போகும் மஹி.. நம்ம டைம் திரும்ப வருமா?"
"Outings கூட அடிக்கடி வரும் போகும் விஷ்வாபாய்!"
அவன் கன்னத்தை வருடிவிட்டு அவள் மீண்டும் பாடப் புத்தகத்தில் மூழ்கினாள்."ப்ச்.. கமான் மஹி."
"புரிஞ்சுக்க விஷ்வா. இது முக்கியம்"
"நீ வர்றயா இல்லயா? இப்ப முடிவா என்ன சொல்ற?" அவன் சற்றே குரலை உயர்த்த, சத்தத்தில் வகுப்பறையில் இருந்தவர்கள் அவர்களை நோக்கித் திரும்பினர்.
சற்றே திடுக்கிட்டாலும் சுதாரித்துக் கொண்டவள் தீர்க்கமான பார்வை பார்த்தாள் அவனை.
"நீ நெனைக்கறது மட்டும்தான் நடக்கணுமா விஷ்வா? ஒருதடவை நான் சொல்றத கேட்கக் கூடாதா? லவ்னா ரெண்டு பேரோட வார்த்தைக்கும் மதிப்பு இருக்கணும்ல? நீ போகலாம்னு சொல்ற, நான் வேணாம்னு சொல்றேன். இப்ப யார் சொல்றதை யார் கேட்கறது?"

ВЫ ЧИТАЕТЕ
மெய்மறந்து நின்றேனே
Любовные романыபெண்ணின் மனதைத் தொட்டு கண்ணாமூச்சி ஆடும் காதல்... காதலின் பரிணாமங்களை நாயகி மூலம் நாமும் அறிந்து கொள்வோம்.