பரிமாற்றம்
அவன் எழுந்தது தெரியாமல் யோசனையில் ஆழ்ந்திருந்தாள் மஹிமா.
விஷ்வா விழித்து அவளது கவலை படர்ந்த முகம் கண்டு வருத்தத்தோடு, "I'm sorry, Mahima" என்றான்.
அவனது குரல்கேட்டு யோசனை கலைந்து அவனைப் பார்த்தாள் அவள்.
"என்ன விஷ்வா?"
"என்னால தான இதெல்லாம்..? நான் மட்டும் அன்னைக்கு கம்ப்ளெய்ண்ட் குடுக்காம இருந்திருந்தா இப்போ அவனுங்க நம்ம வீட்டு வரைக்கும் வந்திருக்க மாட்டாங்கல்ல"
"விஷ்வா... என்னால தானே பிரச்சனை ஆரம்பிச்சது. நான் மேனேஜ்மெண்ட்ல புகார் குடுத்திருக்கக் கூடாது"
"உங்க காலேஜ் பிரச்சனைல நான் வீணா தலையிட்டிருக்கக் கூடாது"
"நான் அவங்க கூட தகராறே செஞ்சிருக்கக் கூடாது"
மாறிமாறி அவர்கள் தங்களைத் தாங்களே குறை சொல்லிக்கொண்டனர். இருவரின் முகத்திலும் வேதனைக் கோலமிட்டது.
"முன்னெல்லாம், என்ன ஆனாலும் பாத்துக்கலாம்னு ஒரு திமிரா, தெனாவட்டா இருந்துட்டேன்.. ஆனா என்னால உனக்கு எதாவது ஆகிடுமோன்னு இப்பல்லாம் ஒருதடவைக்கு ஆயிரம் தடவை யோசிக்கறேன்.."
அவன் மனம்விட்டுப் பேசினான். கண்ணில் கரிசனம் கலந்த பயம் தெரிந்தது.
அவள் புன்னகையுடன் அவன் கன்னத்தை வருடினாள்.
"நீ மெச்சூர்டா மாறிட்டு இருக்க விஷ்வா... முன்னாடில்லாம் உன்னைப் பத்தி மட்டுமே யோசிச்சதால பயம் வரல, இப்போ என்னைப் பத்தியும் உன் மனசு அக்கறைப்பட ஆரம்பிச்சிடுச்சு. அதான்"
அவளது பதிலில் ஆர்வமானவன் அவளை நோக்கித் திரும்பினான். தலை கட்டிலில் இடித்து வலித்தது. அவள் பதறிப்போய் எழுந்து அவன் தலையைத் தேய்த்துவிட்டாள்.
"அடி பலமா பட்டுடுச்சா விஷ்வா? வலிக்குதா?" எனக் கேட்டுக் கொண்டே அவனது காயத்தையும் ஆராய்ந்தாள்.
"நீயும் ரொம்ப மெர்ச்சூர்ட் பொண்ணா மாறிட்ட போல!" வலியிலும் சிரித்தான் அவன். அவன் சிரிப்பு அவளையும் தொற்றிக் கொண்டது.
YOU ARE READING
மெய்மறந்து நின்றேனே
Romanceபெண்ணின் மனதைத் தொட்டு கண்ணாமூச்சி ஆடும் காதல்... காதலின் பரிணாமங்களை நாயகி மூலம் நாமும் அறிந்து கொள்வோம்.