வெளிக்காற்று
விஷ்வா அன்று மிகமிக உற்சாகமாக இருந்தான். தான் பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் பலன் கிடைத்ததுபோல் உணர்ந்தான்.
விமான நிலையத்திலிருந்து தங்கள் விடுதியை அடைந்தவன், தன் அறைக்குச் செல்லாமல், நேரே பரத்தின் அறைக்குச் சென்று, அவனைப் பிடித்து இழுத்து பாலே நடனம் ஆடினான். அவனது ஆட்சேபனைகளைக் கண்டுகொள்ளாமல் ஆடி, அவனைச் சுத்திவிட்டு விழ வைத்தான்.
"டேய்... விடுடா... மெண்டல்! இப்ப என்ன ஆச்சுன்னு இப்டி குதிக்கற? உன் ஆள பாத்தியா? அப்பறம் எப்டி இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட? ஒருவேளை பாக்கலையா? அதான் சோகத்துல மூளை குழம்பிடுச்சா?"
விஷ்வா இன்னும் தன் நடனத்தை நிறுத்தவில்லை. 'ம்...ம்...' என்று அவனே ராகம் போட்டு ஆடிக்கொண்டிருந்தான்.
"ம்ஹூம்...இவன் இப்டிக் கேட்டா பதில் சொல்லமாட்டான். இவன..." என்றவாறு பரத் எழுந்து அருகிலிருந்த ஃபைலை எடுத்து அவனது பின்னந்தலையில் அடித்தான்.
"அம்மா!" என்று அலறிய விஷ்வா, தடுமாறி கட்டிலில் சாய்ந்தான்.
"சொல்லுடா... என்ன ஆச்சு? லண்டன் காத்து கருப்பு எதாவது அடிச்சிடுச்சா?"
"அதெல்லாம் இல்ல. நான் மஹிமாவப் பாத்தேன். அவளோட பேசினேன். அவளக் கட்டிப் பிடிச்சுக்கிட்டேன். அப்றம்..."
"அப்றம்?"
விஷ்வா கண்ணடிக்க, பரத் கத்தினான்.
"அடப்பாவி!! சரி...அதான் சமாதானம் ஆகியாச்சே... அவளைக் கூட்டிட்டு ஊருக்குக் கிளம்ப வேண்டியதுதானே?""ப்ச்.. இன்னும் இல்ல. அவ இன்னும் கோபமா தான் இருக்காளாம். முடிவெடுக்க அவளுக்கு கொஞ்சம் டைம் வேணுமாம். ஆனா அவ மனசு என்னன்னு தெரியும் எனக்கு. லவ் இல்லன்னா என்னை நெருங்கவே விட்டுருக்க மாட்டா."
சொன்னவனுக்கு சென்ற வருடம் கல்லூரியில் வாங்கிய அறை நினைவுக்கு வந்தது. கைகள் அனிச்சையாக கன்னத்தைத் தொட்டது.
VOCÊ ESTÁ LENDO
மெய்மறந்து நின்றேனே
Romanceபெண்ணின் மனதைத் தொட்டு கண்ணாமூச்சி ஆடும் காதல்... காதலின் பரிணாமங்களை நாயகி மூலம் நாமும் அறிந்து கொள்வோம்.