35

1.7K 88 7
                                    

நீயில்லா நேரம்

மஹிமா மாலை முழுவதும் அடுத்த வீட்டுக் குழந்தைகளுடன் விளையாடிக் கழித்தாள். ஆள் அங்கே இருந்தாலும், மனமோ இருபது மைல் தொலைவில் இருந்தவனைச் சுற்றிவந்தது.

நேற்று என்னவோ அலுப்பில் அயர்ந்து தூங்கிவிட்டாள். இன்று அவளை jetlag படுத்தி எடுத்தது. மணி பத்தாகியும் கொட்டக்கொட்ட விழித்திருந்தாள் மஹிமா.

என்றுமில்லாமல் அன்று தனிமை வாட்டியது. அந்தப் பரந்து விரிந்த லண்டன் நகரில் அனைவரும் இன்புற்று இருக்கையில், தான் மட்டும் தனித்திருப்பதாக உணர்ந்தாள். தோளில் ஒரு சால்வையைப் போர்த்திக் கொண்டு வெளியே காற்று வாங்க நடந்துசென்றாள்.

ஜோடி ஜோடியாக இளசுகள் தெருவெங்கும் நடந்துசென்றனர் எதிரில். அவளிடமிருந்து ஒரு பெருமூச்சு கிளம்பி காற்றில் கலந்தது.

'எனக்கும்தான் ஒருத்தன் வாய்ச்சிருக்கானே!'

அந்த அன்னியோன்ய காட்சிகளை அதற்குமேல் காணமுடியாமல் வீட்டிற்கு வந்தாள். கைகள் தானாக அலைபேசியில் அவனை அழைத்தன.

இரண்டு முறை அழைத்தும் அவன் எடுக்காததால், தொய்ந்துபோய் கைபேசியை வைத்துவிட்டு படுத்துக்கொண்டாள். பத்துப் பதினைந்து நிமிடங்கள் கடந்தன. தூக்கம் மெல்ல விழிதழுவும் வேளையில், சத்தமாக அலறியது அவளது கைபேசி.

விருட்டென்று எழுந்து அதை எடுத்தாள் அவள்.
"ஹலோ?"

"கூப்டயா?"

"அ... அது... எனக்குத் தூக்கம் வரல... அதான் பேசலாம்னு..." எனத் தடுமாறினாள் அவள்.

"எனக்குத் தூக்கம் வருது. குட் நைட்"

அவனது பதிலில் திடுக்கிட்டாள் மஹிமா.
"ஒரு நிமிஷம்!"

"ப்ச்...என்ன?"

"ஒண்ணும் இல்ல. குட் நைட்"

மெய்மறந்து நின்றேனேWhere stories live. Discover now