38

1.7K 89 2
                                    

புரிதல்

மஹிமா தன் வீட்டிற்கு வேணியை அழைத்துச் சென்றாள். செல்லும் வழியெங்கும் தோழிகள் இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டும், பேசி சிரித்துக் கொண்டும் வந்தனர். மஹிமா இன்றுதான் தேம்ஸ் நதியின் மொத்த நீள அகலத்தையும் கண்டிருந்தாள். அதை அதிசயித்துப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வேணி தன் கல்லூரி சியன்(seine) நதிதீரத்திலேயே இருப்பதாகவும், தினமும் நதிக்கரையில் சூர்யோதயம் பார்த்தே எழுவதாகவும் கதைகள் பல சொல்லிக்கொண்டிருந்தாள். அதையும் காதில் கேட்டுக் கொண்டு, வியப்பில் ஆழ்ந்திருந்தாள் மஹிமா.

விஷ்வா தான் பாவமாய் அமர்ந்திருந்தான். முன்சீட்டில் ட்ரைவருடன் மட்டுமே வழிகேட்டுக் கொண்டும் பேசிக்கொண்டும் வந்தான். பெண்கள் இருவரும் அவனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், தங்கள் பேச்சில் லயித்திருந்தனர். வேணி எப்போதும் தன்னோடு பேசமட்டாள் என்று அவனுக்குத் தெரியும். ஆனால் மஹிமாவும் தன்னைக் கவனிக்காமல் இருப்பாள் என அவன் நினைக்கவில்லை.

வீட்டை அடைந்தவுடன் அவன் தன்னறையில் தனிமையில் முடங்கினான். அவன் சென்றதை உறுதி செய்துகொண்டு, வேணி மஹிமாவிடம் மெல்லிய குரலில்,
"இவன் எங்கடி இங்க?" என்றாள்.

"விஷ்வாவையா கேக்கற?"

"வேற யாரு இங்க இருக்கா?"

"வேணி... நீ இத எப்டி எடுத்துக்குவன்னு தெரியல... விஷ்வாவும் நானும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புறோம்"

"வாட்?? மஹி, என்ன சொல்ற நீ?"

"ஆமா... அது பெரிய கதை. ஒண்ணாதான் காலேஜ் போனோம். செகண்ட் இயர்ல அவன் லவ்வ சொன்னான். எனக்கும் பிடிச்சிருந்தது. அப்றம் ஆறு மாசத்துல ஒரு பெரிய சண்டை... ரெண்டு பேர் மேலயும்தான் தப்பு. நான் அவன அப்டி பப்ளிக்ல அசிங்கப்படுத்தி இருக்கக்கூடாது. அதுக்கப்றம் ரெண்டு பேரும் பேசிக்கவே இல்ல. நான் அவன மறக்கணும்னு தான் லண்டனுக்கு வந்தேன். ஆனா அவன் உடனே எதப்பத்தியும் யோசிக்காம, என் பின்னாடியே புறப்பட்டு வந்துட்டான். எனக்கு ஒரு செகண்ட் சான்ஸ் கிடைக்குமான்னு கேட்டான். ரெண்டு நாள் யோசிச்சேன். அவன் அவ்ளோ ஃபீல் பண்ணினப்போ எனக்கு அந்தக் காதல் உண்மைனு தான் தோணிச்சு...அதான், இப்போ நாங்க ரெண்டு பேரும் happily together"

மெய்மறந்து நின்றேனேUnde poveștirile trăiesc. Descoperă acum