44

1.8K 90 5
                                    

ஏனென்றால்

மஹிமா நாட்காட்டியைப் பார்த்து திகைத்தாள். இன்னும் இரண்டு நாட்களில் அவனது பிறந்தநாள்.

'விஷ்வா இங்கே வந்ததில் இருந்து அவனுக்காக என நாம் எதுவுமே செய்யவில்லை. இந்தப் பிறந்த நாள் கொண்டாட்டத்தை சரியாகத் திட்டமிட்டு நடத்தினால், அவனுக்கும் இன்ப அதிர்ச்சியாக இருக்கும், நமக்கும் சந்தோஷமாக இருக்கும்'

மஹிமா யோசனையில் ஆழ்ந்திருந்தாள்.

'என்ன செய்யலாம்? அவனுக்கு என்ன கிஃப்ட் கொடுக்கலாம்? ஸ்கூல்ல இருந்தப்ப குடுத்த மாதிரி மொக்கையா இருக்கக் கூடாது. நம்ம காதல சொல்ற மாதிரி செம்மையா இருக்கணும்'

நீண்ட நேர யோசனைக்குப் பிறகு, ஒரு முடிவுக்கு வந்தவள் எழுந்து வெளியே சென்றாள்.

—————————————

அடுத்த நாள் அவளுக்காகவே சட்டென்று கரைந்தது. வழக்கம்போல் அவள் கல்லூரிக்கும், அவன் கடைக்கும் சென்று வந்தனர்.

மாலை அவன் வீட்டுக்குள் நுழைந்தபோது, மஹிமா தன் பாடப் புத்தகங்களில் மூழ்கியிருந்தாள். அவனுக்குப் போட்ட காபி சமையலறை மேடையில் காத்திருக்க, அதை எடுத்துக்கொண்டு அவளருகில் வந்து அமர்ந்தான்.

"ரொம்ப பிஸியா?"

"ம்.. நாளைக்கு ஒரு ப்ரெஸன்டேஷன். காலைல சீக்கிரமே கிளம்பணும். எனக்கு டின்னர் வேணாம். நான் இப்ப தான் சாப்ட்டேன். உனக்கு எதாச்சும் வேணும்னா ஹோட்டல்க்கு போ...இல்லன்னா ஆர்டர் பண்ணிக்கோ. நான் தூங்க லேட்டாகும். சோ, நீ பாட்டுக்கு சாப்ட்டு தூங்கு"

முகத்தில் எந்த வித்தியாசமும் இன்றி அவள் படபடவென்று பேசிவிட்டு மீண்டும் புத்தகத்தில் லயித்தாள். அவன் ஒரு நிமிடம் அவளை உற்றுப் பார்த்துவிட்டு, முகம் வாடியவாறு எழுந்து சென்றுவிட்டான்.

இரவு ஒன்பது மணிவரை யாரும் பேசவில்லை. விஷ்வா தான் வந்து,
"இப்பவும் பசிக்கலையா? மணி ஒன்பது ஆகுதே?" என்றான்.

மெய்மறந்து நின்றேனேWhere stories live. Discover now