உணர்தல்
கல்லூரியில் சென்று தகவல்கள் திரட்டிய மஹிமாவின் தந்தை அவள் வகுப்புத் தோழர்கள் அனைவருக்கும் அலைபேசியில் அழைத்துப் பேசத் தொடங்கினார்.
முதலில் ஆதீஷ்.
"ஹலோ... யார் பேசறது?"
"தம்பி, நான் உன் க்ளாஸ்மேட் மஹிமாவோட அப்பா பேசறேன். நீங்க ஆதீஷ் தானே?"
"அ.. ஆமா அங்கிள். சொல்லுங்க"
"தம்பி, மஹிமா பத்தி எனக்கு ஒரு விஷயம் தெரியணும். தப்பா நினைச்சுக்க வேணாம்... அவ யாரை லவ் பண்ணினா பா?
"...."
"சொல்லு தம்பி.. உனக்கு எதாவுது தெரியுமா?"
"அ... இல்ல அங்கிள். எனக்குத் தெரியாது. நான் அவளோட அவ்ளோ க்ளோஸ் இல்ல"
"ஓ... சரி தம்பி. வைக்கிறேன்"
அடக்கிய மூச்சு பெருங்காற்றாய் வந்தது அவனுக்கு. உடனே தன் நண்பர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பினான், நடந்ததைக் கூறி எச்சரிக்கையாக இருக்கச் சொல்லி.
அடுத்தது யாரைக் கேட்பாரோ!
அவசரமாக விஷ்வாவுக்குத் தொடர்புகொள்ள முயன்று தோற்றான் ஆதீஷ். அவனது எண் வேறொருவருடன் பேசிக்கொண்டு இருப்பதாக கணினிக் குரல் சொன்னது. ஆதீஷ் திகைத்தான்.
மாட்டிக்கிட்டயா விஷ்வா?
—————————————————‐
விஷ்வா தன் கைபேசி அடிப்பதை உணர்ந்து அதை எடுத்தான்.
ஜோஷி அழைத்திருந்தான்.
"டே விஷ்வா...இப்போத் தன்னே ஸ்டேட்டஸ் நோக்கி! கொங்க்ராஜுலேஷன்ஸ் நிண்டே அண்ணிக்கு!"
"பார்ரா? ஒன்றரை வருஷம் வாட்ஸ்ஸாப்பில மட்டும் பேசிட்டு... பத்திரிக்கை அனுப்பினா கல்யாணத்துக்கும் வராம, இப்ப அண்ணி வளைகாப்புக்கு விஷ் பண்றயா நீ?"
YOU ARE READING
மெய்மறந்து நின்றேனே
Romanceபெண்ணின் மனதைத் தொட்டு கண்ணாமூச்சி ஆடும் காதல்... காதலின் பரிணாமங்களை நாயகி மூலம் நாமும் அறிந்து கொள்வோம்.