அழகிய தீயே
மஹிமா பற்பல யோசனைகளோடு அமர்ந்திருந்தாள்.
விஷ்வா வேண்டுமென்றே தான் அதையெல்லாம் செய்கிறானென அவளுக்குத் தெரியவில்லை.
அவன் தன்னைக் கடந்து போய்விட்டதாகவே தோன்றியது அவளுக்கு.
விஷ்வா தன்னிடம் கடைசியாகப் பேசியது நினைவுக்கு வந்தது.
"ஏதோ கோபத்தில சொல்லிட்டேன்... அதுக்காக?"'நம்மிடம் அவன் மன்னிப்புக் கோரவில்லை. தன் நிலையை மட்டுமே கூறினான். நாமாகப் புரிந்துகொண்டு அவனிடம் சேரவேண்டும் என்று நினைத்தான்.'
அவன் மாறவே இல்லை. மாறவும் போவதில்லை. அவனைக் காதலித்த பாவத்திற்கு நாம்தான் காயப்பட்டுக் காயப்பட்டு ரணமாகிறோம்.
ஏதேதோ கலக்கங்கள் மனதில் தோன்ற, கண்ணீர் அவளையறியாமல் கன்னங்களில் வழிந்தது.
" என்னாச்சு மஹிமா?"
ப்ரதிபா தான் பார்த்துக் கேட்டாள்."விஷ்வா."
ஒற்றை வார்த்தையே அவள் மனதைச் சொல்லியது.
"இன்னும் மறக்கலையா?"
"என்னிக்கும் மறக்க முடியாது ப்ரதி. ஃபர்ஸ்ட் லவ். ஃபர்ஸ்ட் லாஸ். "
"ப்ச், சரி... இவ்ளோ நாள் நல்லா தானே இருந்த? இப்ப திடீர்னு என்னாச்சு? இப்படி க்ளாஸ்ல உட்கார்ந்து அழுதுட்டு இருக்க?"
"இவ்ளோ நாள் எதுவும் பெருசா தோணல... இன்னிக்கு... அவன வேற ஒரு பொண்ணோட..."
"இதென்ன அநியாயம்...நீயும் பேச மாட்ட, அவனும் யாரோடவும் பேசக் கூடாதா?"
"சரி விடு... நான் எது பேசுனாலும் உனக்கு அநியாயமாத் தான் தெரியும்"
"அப்டி இல்ல மஹிமா. அவன்மேல அவ்ளோ கோபமா இருந்த, அவன் வேணான்னு நீதான சொன்ன...? அப்றம் அவன் எப்டிப் போனா என்ன? நீ ஏன் ஃபீல் பண்ற?"
![](https://img.wattpad.com/cover/206775439-288-k876917.jpg)
YOU ARE READING
மெய்மறந்து நின்றேனே
Romanceபெண்ணின் மனதைத் தொட்டு கண்ணாமூச்சி ஆடும் காதல்... காதலின் பரிணாமங்களை நாயகி மூலம் நாமும் அறிந்து கொள்வோம்.