பனிப்போர்
மஹிமாவின் கண்ணில் அந்த கத்தி தென்பட்டது. சப்தநாடியும் ஒடுங்கிப்போனது அவளுக்கு.
"Hey...what's that knife for? You know i don't mean any harm, right?"
அவனோடு சமாதானம் பேச முயன்றாள் அவள்.அந்த இளைஞனின் முகமோ கல்லாக இருந்தது. அவன் கண்களில் துளி ஈரம் கூட இல்லை.
"You b***h! You dare speak against us?"
கத்திக்கொண்டே இரண்டடி முன்னால் வந்தான் அவன்.அவள் பயந்துபோய் தரையில் விழுந்தாள்.
"ஹெல்ப்! ஹெல்ப்!"
ம்ஹூம். அங்கிருந்த ஓரிரண்டு மாணவர்களும் அவனது கத்தியைக் கண்டதும் ஓடிவிட்டனர். அந்த பூங்கா வளாகத்தில் அவள் மட்டும் தனியாக மாட்டியிருந்தாள். பயத்தில் அழுகை வந்தது. அவள் அழுவதைக் கண்டவன், ஒருவித குரூரச் சிரிப்போடு அவளை நோக்கி வந்தான்.
டமால்!
சட்டென்று ஏதோ இடிதாக்கியது போல் உறைந்தான் அவன். அடுத்தநொடி தலையைப் பிடித்துக்கொண்டு தரையில் மண்டியிட்டான்.மஹிமா அவனை அதிர்ச்சியோடு பார்த்துவிட்டு, அவனை யார் அடித்தது என்று நிமிர்ந்து பார்த்தாள். ஒரு ஆப்பிரிக்க-அமெரிக்க மாணவன் அங்கே நின்றிருந்தான்.
"Run! Run away!" என்று கத்தினான் அவன். மஹிமாவும் எழுந்து ஒட முயன்றாள். அந்த மாணவனும் கையிலிருந்த கட்டையை கீழே போட்டுவிட்டு எதிர்த்திசையில் ஓடினான். ஆனால் அவள் இரண்டடி எடுத்து வைப்பதற்குள் கீழே விழுந்திருந்தவன் சட்டென்று பாய்ந்து அவள் கையைப் பிடித்தான். கத்தியை வைத்திருந்த கையால் பிடித்ததால் அது அவளது தோலைக் கிழித்து உள்ளே இறங்கியது.
மஹிமா வலியில் அலறினாள். எப்படியோ முயன்று அவனிடமிருந்து தப்பித்தாள். அவனுக்குத் தலையில் அடிபட்டிருந்ததால் நேராக நடக்கவோ, ஓடவோ முடியாமல் மயங்கிச் சரிந்தான்.
ஓடிவந்து பேருந்து நிறுத்தத்தில் நின்றாள் அவள். அவள் உடையில் இருந்த அழுக்கு, மற்றும் கையில் வழிந்த இரத்தம் அனைத்தையும் பார்த்து அங்கே நின்றிருந்தவர்கள் அலறினர். ஒரேயொரு வயதான கிழவர் மட்டும் அவளுக்கு முதலுதவி அளித்து, குடிப்பதற்கு கொஞ்சம் தண்ணீரும் தந்தார்.
![](https://img.wattpad.com/cover/206775439-288-k876917.jpg)
YOU ARE READING
மெய்மறந்து நின்றேனே
Romanceபெண்ணின் மனதைத் தொட்டு கண்ணாமூச்சி ஆடும் காதல்... காதலின் பரிணாமங்களை நாயகி மூலம் நாமும் அறிந்து கொள்வோம்.