தித்திக்குதே
கார் அவளை ஏற்றிக்கொண்டு லண்டன் விமான நிலையத்திலிருந்து நகருக்குள் சென்றுகொண்டிருந்தது.
மஹிமா தூங்கிவிட்டதால் பல அற்புதமான காட்சிகளை அவள் காணவில்லை. தேம்ஸ் நதிப் பாலத்தில் கார் சென்றபோது, இருபுறமும் கடல் போல விரிந்திருந்த நதியில் மிதந்த படகுகள் , 'வெஸ்ட்மினிஸ்டர் அபே'யில் நடந்துகொண்டு இருந்த நாட்டிய விழா, என அனைத்தையும் தவற விட்டிருந்தாள்.அவளது பயணக் களைப்பும், அசதியும், அந்நாளின் அதிர்ச்சிகளும் அவளை அடித்துப் போட்டாற்போல உறங்கச் செய்தன.
நாராயணன் பேசிக்கொண்டே வந்து, ஒருகட்டத்தில் அவளிடம் பதில் வராமல் போகவும் சந்தேகமாகத் திரும்பிப் பார்த்து, சிரிப்புடன் தலையில் தட்டிக்கொண்டான். அவளை எழுப்பாமல் குறைவான சத்தத்தில் மெல்லிசை ஒன்றைத் தவழவிட்டு, லண்டனின் சீதோஷ்ணத்தை ரசித்தபடி காரைச் செலுத்தினான்.
கார் லண்டனின் மையப்பகுதியில் Coniston roadல் திரும்பி, அங்கிருந்த பழமையான ஒரு வீட்டின்முன் நின்றது. வண்டி சட்டென்று நின்றதும் மஹிமா திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள். கண்களைத் துடைத்துக் கொண்டு சுற்றுமுற்றும் பார்த்தாள்.
"அதுக்குள்ள வந்துட்டோமா நாராயணன்?"
"அ.. மேடம்.. நாராயணன் வேணாம்.. Everyone here calls me Nary"
அவன் சொன்னதைப் புரிந்துகொண்டு, அவள் மறுபடியும் கேட்டாள்.
"Ok. அதுக்குள்ள வந்துட்டோமா Nary?"
அதைக் கேட்கையில் அவளுக்கே சிரிப்பாக இருந்தது.
நேரியாம்... நரி மாதிரி அல்லவா இருக்கிறது!
"ஆமா மேடம். உங்க அப்பா பார்க்கச் சொன்னபடி சேஃப் ஆன 'இல்லு'. ஒன்லி ஃபேமிலிஸ் மாத்ரமே உந்தி. உங்க வீடு சென்டர்கா இருக்கு. வாங்க, வீட்டை பாக்கலாம்."
YOU ARE READING
மெய்மறந்து நின்றேனே
Romanceபெண்ணின் மனதைத் தொட்டு கண்ணாமூச்சி ஆடும் காதல்... காதலின் பரிணாமங்களை நாயகி மூலம் நாமும் அறிந்து கொள்வோம்.