என்னவன்
"உன்னோடவே இருக்கறேன் மஹிமா."
"என்னது?"
"உன்கூடவே இருந்துடுன்னு காலைல கேட்டியே?"
"ப்ச், விஷ்வா.. அது ஏதோ-- ம்ஹூம்.. அதையெல்லாம் காலைல பேசிக்கலாம். இப்ப நீ தூங்கு. குட் நைட்."
மேற்கொண்டு பேசவிடாமல் அவள் வெளியே செல்ல, விஷ்வா இன்னும் அதிசயம் மாறாமல் அமர்ந்திருந்தான்.
மஹிமா இரவெல்லாம் கண் விழித்திருந்தாள். தூக்கம் வரவில்லை. மனம் ஆனந்தத்தில் துள்ளியதால் கண்மூட முடியவில்லை அவளால். வெட்கச் சிவப்பு கன்னமெல்லாம் பூசியிருந்தது. பூரிப்பில் உதடுகள் விரிந்தே இருந்தன. முதல்முறை தன் காதலைக் கத்திச் சொன்ன விஷ்வா மனதில் வந்து சென்றான். அந்த நாளும் இதுபோலவே தூக்கம் தொலைத்துத் தவித்திருந்ததை நினைத்துப் பார்த்தாள்.
விஷ்வாவும் தூக்கம் தொலைத்திருந்தான். ஒன்றரை வருட ஏக்கம், தாபம் எல்லாம் அவனைப் புரண்டு புரண்டு படுக்க வைத்தன. விடியும் வரை அவன் அப்படியே தத்தளித்தான். எழுந்து அவளது அறைக்குச் செல்லலாமா என யோசித்தான், ஆனால் அவ்வெண்ணத்தை உடனே கைவிட்டான்.
அவள் என்ன நினைப்பாள்? இதற்காக வந்ததாக நினைத்தால்? பொறு விஷ்வா. உனக்கு நாளை வேறு பிரச்சினைகள் இருக்கின்றது.
அண்ணனை நினைக்கும்போது விஷ்வாவுக்கு நெஞ்சம் பதபதைத்தது.
'என்மேல் எத்தனை பாசம், எத்தனை நம்பிக்கை வைத்திருந்தார்! அவர்களை இப்படித் தூக்கியெறிந்துவிட்டு வந்துவிட்டோமே... அவரிடம் எந்த முகத்தை வைத்துக்கொண்டு போவேன்? என்ன சமாதானம் சொல்வேன்? கடவுளே என் வாழ்க்கை ஏன் இப்படிப் போகிறது?'
கண்டபடி மனதுக்குள் புலம்பியவாறு புரண்டு கொண்டிருந்தவனை அவளது இனிய குரல் எழுப்பியது.
"விஷ்வா... மணி அஞ்சாச்சு. ஃப்ளைட் ஆறரை மணிக்கு. எழுந்திரிச்சி வா."
YOU ARE READING
மெய்மறந்து நின்றேனே
Romanceபெண்ணின் மனதைத் தொட்டு கண்ணாமூச்சி ஆடும் காதல்... காதலின் பரிணாமங்களை நாயகி மூலம் நாமும் அறிந்து கொள்வோம்.