நீங்காதே
மூச்சு வாங்கியபடி வீட்டுக்கு வந்தவர்கள் சோபாவில் சாய்ந்தனர் சிரித்தபடி.
சற்று நேரம் யோசனையாக அமர்ந்திருந்தான் விஷ்வா.
"ஹேய்.. என்ன ஆச்சு?"
"இன்னும் ஒரு மாசம்தான் மஹி.. லண்டன் நகருக்கு குட்பை."
"ப்ச்.. ஆமால்ல? இந்த சிட்டியை, இந்த வீட்டை, எல்லாத்தையும் மிஸ் பண்ணுவேன் நான்."
"ம்ம்.."
"அட்லீஸ்ட் வருஷத்துக்கு ஒருதரம் இங்க வந்துட்டுப் போலாம் விஷ்வா.. ப்ளீஸ்?"
"எப்ப, கல்யாணத்துக்கு அப்பறமா?"
அவன் சிரிக்க, அவளோ தீவிரமாகப் பார்த்தாள்.
"ஆமா விஷ்வா. அதுக்கு ஏன் சிரிக்கற?"
"அதுக்கு என்னும் எத்தனை கடலைத் தாண்டணுமோ.. எத்தனை மலை ஏறணுமோ.. ஈஸியில்ல மஹி."
அவள் முகத்தின் புன்னகை வடிந்தது.
"ஏன் விஷ்வா?"
"ப்ச்.. நீ உங்க டாடிகிட்ட ஈஸியா பேசிடுவ. நான் என்ன பண்ணுவேன்? வீட்ல யாரு எந்த மூட்ல இருக்காங்கனு தெரியல.. உண்மை தெரிஞ்சா என்ன செய்வாங்கனும் தெரியாது. என்னால வீட்ல பேச முடியாது. அநேகமா நீதான் எங்க வீட்லயும் உங்க அப்பாவைக் கூட்டிட்டு வந்து பேசுற மாதிரி இருக்கும்."
"ஐயைய.. நான் அதை செஞ்சா நல்லா இருக்காது விஷ்வா. இன்னும் நம்ம ரெண்டு பேரும் செட்டில் ஆகலை. நீ ஒரு வேலை வாங்கிட்டு, மெதுவா உங்க வீட்ல நம்மளப் பத்தி சொல்லு. அப்றம் அவங்களோட வந்து எங்க அப்பாகிட்ட பேசு. அதுமட்டுமில்லாம, நான் உடனே போய் அப்பா கிட்ட சொன்னா, நிறைய கேள்வி கேப்பார். அவர் ஒத்துக்கிட்டாலுமே, நான் அவரை ஏமாத்திட்டேன்னு நெனைச்சு வருத்தப்படுவார்.."
அவன் திரும்பி வினோதமாகப் பார்த்தான் அவளை.
"நானும் தானே எங்க ஃபேமிலியை பிரிஞ்சு வந்தேன்..? நானும் தானே எங்க அம்மா, அப்பா கிட்ட பொய் சொல்றேன். அவங்களும்தானே வருத்தப்படுவாங்க?."
YOU ARE READING
மெய்மறந்து நின்றேனே
Romanceபெண்ணின் மனதைத் தொட்டு கண்ணாமூச்சி ஆடும் காதல்... காதலின் பரிணாமங்களை நாயகி மூலம் நாமும் அறிந்து கொள்வோம்.