மாற்றம்
பொதுத் தேர்வு முடிவு அறிவிப்பு நாள்.
இயல்பாகவே விடிந்தாலும், அந்நாளின் முக்கியத்துவத்தை காற்றில் இருந்த ஒரு கனம் காட்டியது. மஹிமா எழுந்து தயராகி வந்தபோது, அப்பா ராஜகோபால் ஏற்கனவே கணினியோடு அமர்ந்திருந்தார். அவளைப் பார்த்ததும் புன்னகைத்தார்.
"வா மஹி. இன்னும் அரைமணி நேரம் டா. ரிசல்ட் வந்திரும்"
"ஹ்ம்ம்.. சாப்டீங்களாப்பா?"
"ஓ.. ஆச்சுடா. நான் ஆறு மணிக்கே எழுந்துட்டேன். தூக்கம் வரலை. உன்னை எழுப்ப வேணாம்னு பங்கஜம்மா கிட்ட நான்தான் சொன்னேன். ரிலாக்ஸா தானே இருக்க?"
"ம்ம், ஆமாப்பா"
"சரி, நீ போய் சாப்டு. ரிசல்ட் வந்ததும் நான் கூப்டறேன்."
"இல்லப்பா. இங்கயே எடுத்துட்டு வந்தர்றேன்"
பீங்கான் தட்டில் இரண்டு தோசைகளும் சாம்பாரும் எடுத்துக்கொண்டு வந்து அப்பாவின் அருகில் அமர்ந்தாள் அவள். கிச்சனில் பங்கஜம் அம்மாள் ஏதோ ஸ்வீட் செய்துகொண்டு இருப்பதையும் அவள் கவனிக்கத் தவறவில்லை.
"டென்ஷனா இருக்கா மஹிம்மா?"
மகளின் முகத்தை ஆர்வமாக நோக்கினார் ராஜகோபால். அவளோ சாந்தமாக இருந்தாள்."இல்லப்பா. ஆர்வமா தான் இருக்கு."
சிரித்துக் கொண்டார் ராஜகோபால்.
அரைமணி நேரக் காத்திருப்பு அரை யுகமாகக் கழிந்தது.
எதிர்பார்த்ததைவிட நல்ல மதிப்பெண்கள் வாங்கியிருந்தாள் அவள். 572.
இரண்டு பாடங்களில் சதம். பள்ளியில் மூன்றாமிடம்.சொல்லிவைத்தாற்போல் அவள் மார்க் பார்த்ததும் அலைபேசி அடித்தது. மஹிமா உற்சாகமாக சென்று அதை எடுத்தாள். விஷ்வா தான். வாழ்த்துத் தெரிவித்த விஷ்வாவிடம் மார்க் கேட்டபோது அவன், "guess?" என்றான். விளையாட்டுப் பிரியன் அவன்.

ВЫ ЧИТАЕТЕ
மெய்மறந்து நின்றேனே
Любовные романыபெண்ணின் மனதைத் தொட்டு கண்ணாமூச்சி ஆடும் காதல்... காதலின் பரிணாமங்களை நாயகி மூலம் நாமும் அறிந்து கொள்வோம்.