வாள் ரகசியம்...

19 5 16
                                    

தன் குழப்பத்தை தீர்க்கவென ஆதிலோகம் வந்திருந்த தீரா, இப்போது நுவழி பாட்டியையும் சேர்த்து குழப்பத்தில் ஆழ்த்தியது தான் மிச்சம். ஆதிலோக சரித்திரத்தில் இதுவே முதல் முறை, தன்னிடம் வந்த ஒரு கேள்விக்கு பதில் இல்லை என சொல்லி நுவழி பாட்டி அனுப்பி வைப்பது.

பாட்டியிடமே பதில் இல்லை என்றால் இனி எங்கு சென்று யாரை    கேட்டபதென தீவிர யோசனையுடன் சாலையில் நடந்து கொண்டிருந்தவளின் கவனம், இப்போது, தனக்கு முன்னால் அமைதியாக நடந்து கொண்டிருந்தவனை நோக்கி நகர்ந்தது.

பாட்டியை பார்க்கும் முன் தன் அபி மாமாவை ஒரு எட்டு பார்த்துவிட்டு செல்லலாம் என நினைத்து வீட்டிற்கு சென்றிருந்தவள், சக்திகள் முழுதாக குணமாகும் முன் அவனும் இப்படி தன்னுடனே வந்துவிடுவான் என நினைத்திருக்கவில்லை. விஷயத்தை சொல்லி பாட்டியை சந்திக்க போகிறேன் என சொல்லும்போதே தானும் வருவதாக வீம்பாக நின்றவன், இப்போது, சாலையில் கவனம் இல்லாமல் அவ்வப்பொழுது கால்களை இடறிக் கொண்டு நடப்பதை கண்டு பரிதாபம் கொண்டது அவள் மனம்.

"மாமா நீ இன்னும் முழுசா குணமாகல.. ஏன் இப்டி கொழந்த மாறி அடம்புடிச்சு கஷ்ட்டப்படுற?

"எனக்கு வீட்டுல இருக்குறது புடிக்கல."

"அதுவும் சரி தான்... ஒரே எடத்துல இருந்தா யாருக்கு தான் புடிக்கும். ஆனா, உன்னோட சக்திகள் சீக்கிரமே உன்கிட்ட திரும்ப வரணும்னா நீ ரெஸ்ட் எடுக்கணும் மாமா"

"அத அப்பறம் பாத்துக்கலாம்"

"ஆனா-"

"கொஞ்ச நேரம் அமைதியா வரியா?" அபி எரிச்சலாக கத்த, ஆத்ம-சக்தி முழுமையாக குணமடையும் வரையில் அபியின் செய்கைகள் வழக்கம்போல் இருக்காது என அரவிந்தன் எச்சரித்திருந்ததால், "சொன்னா கேக்கவா போற?" தனக்குள்ளேயே முணங்கிக்கொண்டு அமைதியாக நடந்தாள் அவள். சில நொடிகள் கடந்த நிலையில் அபியே வாயை திறந்தான்.

"அந்த சக்தி எப்டி இருந்துச்சு?"

"எந்த சக்தி, மாமா?"

காவல் வீரா - 2 (ரக்ஷவனின் சாகச பயணம்)Opowieści tętniące życiem. Odkryj je teraz