நள்ளிரவு தாண்டியிருந்த வேளையில் ஏதோ ஒன்று அசௌகரியமாக உணர்ந்த அர்ஜுன், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து எழ முயற்சித்த நேரம் அவன் கண்களை திறக்க விடாமல் பளிச்சென்ற ஒளி ஒன்று அந்த அறையை ஆக்கிரமித்திருக்க.. தன் கண்ணை கூசச் செய்யும் அந்த ஒளியை மீறி கண்களை திறந்துபார்க்க முயன்றவனை அதிகம் சோதிக்காமல் அந்த ஒளியே மங்கிப்போய் அவன் பார்வைக்கு வழி விட்டது.
அவன் கண்களை திறந்த நொடியே தாமதிக்காமல், 'பக்கத்துல கெடந்தவன் ஒழுங்கா இருக்கானா?' என தன்னருகில் மாலை முதலாக மயக்கத்தில் கிடந்தவனை தான் முதலில் தேடினான். ஆனால் அவனைதான் காணவில்லை அங்கே. அர்ஜுனின் சந்தேகம் சரிதான் என்பதுபோல் அந்த ஒளிக்கு காரணமாக இருந்தது சட்ஷாத் நம் ரட்சகனே.
அருகில் கிடந்தவனை காணமால் ஒரு நோடியே பதறியவன் அடுத்த நொடி தன் கண் அழைக்கும் திசையில் பார்க்க... உடலை சுற்றிலும் நெருப்பு வளையம் சூழ நிலத்தை விட்டு மேலே எம்பிப் பறந்து கொண்டிருப்பவனை ஜன்னல் வழியாக வந்த ராட்சஸ காற்று திருடிச் சென்று கொண்டிருந்தது. அக்காட்சியை கண்ட மாத்திரத்தில் விழுந்தடித்து கட்டிலிலிருந்து தரைக்குத் தாவியவன், தான் தூங்க செல்லும் முன் ஒருத்தி ஹாலில் நின்றுகொண்டு 'எப்போ என்ன ஆனாலும் என்னை கூப்புடு.. நான் ஹால்லயே தான் இருப்பேன்' என ஹர்ஷனுடன் சேர்ந்து சொன்னது நினைவுக்கு வர.. அவளை பிடிக்க தான் முதலில் ஓடினான்.
தீராவை எதிர்பார்த்தே கதவை வேகமாக திறந்த அர்ஜுன், "ஹே...அவன்-" அவசரமாக எதோ சொல்ல வந்து அப்படியே நின்றான்; தூங்க செல்லும் முன் வீட்டில் இல்லாத இருவர், ஒரே போலான முக தோற்றத்துடன் வெவ்வேறு நிற டி-ஷர்ட் அணிந்துகொண்டு இருக்கும் இருவர், இரு திசையில் வாக்கிங் செல்லும் போஸில் நின்றபடியே அவனை நோக்கித் திரும்பி பார்ப்பதை கண்டு.
"ஹேய்! நீங்க யாரு?" தான் சொல்ல வந்ததை நொடியில் மறந்த அம்னீஸியா பேஷன்ட் போல் சட்டென கேள்வியை மாற்றிக் கேட்டவன், அவர்கள் இருவருக்கு இடையிலும் 'கண்டுபிடி எட்டு வித்தியாசம்' தலைப்பு போட்டிருப்பது போல் மாற்றி மாற்றி இருவரையும் பார்க்கத் தொடங்கினான்.
DU LIEST GERADE
காவல் வீரா - 2 (ரக்ஷவனின் சாகச பயணம்)
Poesieகுறிப்பிட்ட காலம் கடந்தும் தன் வாழ்வின் இலக்கினை அறியாமல் விளையாட்டு பிள்ளையாகவே வளம் வரும் நாயகன்... புவியின் ரட்சகன்.. அவனது பிறப்பின் நோக்கத்தை அறியும் நேரம் எண்ணிலடங்கா இன்னல்களை சந்திக்க நேர்கிறது. அந்த துயரிலும் தன்னை அறிய அவன் மேற்கொள்ளும் ஒ...