சுயநினைவுடன் அவன் சக்திகள்...

13 5 16
                                    

ரட்சகனின் தாக்குதலால் காயமடைந்து மயங்கிய சமாரா, எப்படி அந்த கருநிற மாயவாயிலை திறந்தாள் என்பது அவனுக்குத் தெரியாது.. அவள்தான் திறந்தாளா என்பது கூட தெரியாது. இருந்தும்   அவளை தூக்கிக்கொண்டு, எங்கு சென்று முடியும் என தெரியாத அந்த மாயவாயிலினுள் நேராக நடந்த ஷேனா, இறுதியாக வந்திருந்தது அதே இடம் தான்... ஒரு நாள் முழுக்க அவன் மயங்கிக் கிடந்து ஜுரத்துடன் போராடிய இடம்.

ஒரு மரத்தில் கீழே அவளை கிடத்தியவனுக்கு அடுத்து என்ன செய்யவென விளங்கவில்லை... நிமிர்ந்து நின்று யோசனையுடன் பரபரத்தவன் சிந்தைக்கு எந்த யோசனையும் எட்டவில்லை. எப்படி எட்டும்? அவனுக்காக யோசிக்க வேண்டியவள்.. அதாவது, அவனை வசியக்கட்டில் வைத்திருப்பவள் தான் இப்போது தெளிவாக சிந்திக்கும் நிலையில் இல்லையே! பிறகு இவன் சிந்தை எப்படி செயல்படும்?

 சமாராவை பொறுத்த வரையில் அவளுக்கு ஏற்பட்டிருப்பது அவ்வளவு பெரிய காயமெல்லாம் கிடையாது, இத்தகைய காயம் வேறு எவரேனும் ஒருவரால் ஏற்பட்டிருந்தால். ஆனால் இதுவோ ரட்சகன் தன் தூய மாயத்தினால் தந்த காயமாதலால் தன் சக்திகளை இழந்து அரைகுறை சுயநினைவுடன் மயங்கிக் கிடக்கிறாள்.

காரியத்தில் சுயநலம் இருப்பினும் தன் ஜுரத்திற்காக வனதேசம் சென்று மூலிகை எடுத்து வந்தவளுக்காக ஏதேனும் செய்யவேண்டும் என்று மட்டும்தான் உள்மனதுக்குள் குரல் கேட்டது ஷேனாவிற்கு... இருந்தும் என்ன செய்ய? அவனால் தான் மாயவாயிலை திறக்க முடியாதே!

தன் இயலாமையை நினைத்து எரிச்சலுடன் இங்குமங்கும் நடந்தவன் தன் கையால் ஒரு மரத்தில் குத்தி எரிச்சலை அடக்க முயற்சித்த நேரம், "ரா... --... ரா. உன்... ச..தி" சமாரா ஏதோ முணங்கிடுவதை கண்டு அவளருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்தவன் செவியை அவளை நோக்கி வைத்தபடி சற்று குனிய... "ரா.....ணா.... ... வேண்டும்.. உன்.... உன் சக்தி... வேண்டும்..." அவளின் இமைகுள் உருளும் கண்மணிகள் அந்த இமையை தகர்க்க முயற்சிப்பதை ஷேனாவால் தெளிவாக பார்க்க முடிந்தது.

காவல் வீரா - 2 (ரக்ஷவனின் சாகச பயணம்)Tahanan ng mga kuwento. Tumuklas ngayon