~ மரத்தில் சாய்ந்து எவ்வளவு நேரம் கண்ணயர்ந்திருந்தானோ, விழிப்பு தட்டி மெல்லமாக அவன் கண் திறந்த நேரம், மடியில் துயில் கொண்டிருந்த அவனின் அழகி இல்லை...
பதறி எழுந்தவன் சுற்றிலும் அவளை தேடி நோக்க... அது அவர்கள் இருந்த அந்த சோலைவனமே கிடையாது... கருங்கும்மென இருண்டுபோய் கிடந்த ஒரு குகை அது.
அவளை காணாமல் அவன் உள்ளம் பதற... கண்கள் அந்த இருளிலும் அவளின் உருவத்தை தேடி அலைய... நல்லவேலையாக அங்கு தூரத்தில் தோன்றியது ஒரு சிவந்தநிற வெளிச்சம்.
திக்குத் தெரியாமல் தவித்திருந்தவனுக்கு ஒளியின் துணை கிடைத்தால் வேறென்ன?.. காலில் இடிக்கும் பாறைகளை கடந்து நேராக அந்த ஒளியின் வழியிலேயே விரைந்தவன் குகையை விட்டு வெளியேறி வெளியே வந்து பார்க்க... பட்டை மரங்கள் இலைகலற்று குச்சி குச்சியாக நிற்கும் வறண்ட காட்டின் நடுவே இருக்கும் நீர் நிரம்பிய குட்டை ஒன்றினை வெறித்துக்கொண்டு நின்றிருந்தாள் அவள்.
"அங்கென்ன செய்கிறாய்?" அவன் பதட்டமாக அவளை நோக்கி விரைய, "குழம்பிய மனதிற்கு குட்டைகள் தான் விடை கொடுக்கும்" என கூறியவள், அவனை நோக்கித் திரும்பிய நொடியில் சிறு புன்னகையுடன் அதனுள் குதித்தாள். நீருக்குள் இருந்து தோன்றிய மஞ்சள் வண்ண ஒளி, அவன் கண்முன்னேயே அவனின் அழகியை விழுங்கிச் சென்றது. ~
"போகா.. போகாதே... நீ... போகாதே..வா..எங்கு சென்றாய்" மாயவாயில் வழியாக அப்போதே அவ்விடத்தை அடைந்திருந்த சமாரா, காற்றில் கையை துளாவிக்கொண்டே, தான் உருவாக்கிய கருநிற நெருப்பின் அருகில் புரண்டுக் கொண்டிருக்கும் ஷேனாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, வேறு ஒரு மாயவாயிலை திறந்து அதனுள் சென்றாள்.
✨✨✨
"ஹே பாப்பா.." புதிதாக தான் உணர்ந்த சக்தியை தேடித் தேடி பள்ளி வாயிலுக்கே வந்துவிட்ட தீராவின் செவிகளை சேர்ந்தது, சமீபத்தில் எங்கேயோ அவள் கேட்ட குரல். பள்ளி வாயிலை நோக்கி அவள் தலை தானாகவே திரும்ப.. இன்னுமும் அந்த ஜெயில்-கைதி போஸை மாற்றாதது போல் அவளை பார்த்து நின்றான், காலையில் அவள் கையில் பென்சில் பாக்ஸை கொடுத்து விட்டவன்.
أنت تقرأ
காவல் வீரா - 2 (ரக்ஷவனின் சாகச பயணம்)
شِعرகுறிப்பிட்ட காலம் கடந்தும் தன் வாழ்வின் இலக்கினை அறியாமல் விளையாட்டு பிள்ளையாகவே வளம் வரும் நாயகன்... புவியின் ரட்சகன்.. அவனது பிறப்பின் நோக்கத்தை அறியும் நேரம் எண்ணிலடங்கா இன்னல்களை சந்திக்க நேர்கிறது. அந்த துயரிலும் தன்னை அறிய அவன் மேற்கொள்ளும் ஒ...