♥️ அன்றில் அவன் 1 ♥️

511 10 7
                                    


மழையோ விடாது இரவாகியும் கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்க, இதில் இடி, மின்னல் வேறு செவிகளை பிளக்க வாசலில் தவிப்போடு காத்திருந்தார் மங்களம்.

“அர்ஜூனா, பகவானே இன்னைக்கு ஏன்பா என்னை சோதிக்கிற..?” புலம்பியவாறு கையிலிருந்த கைபேசியில் அழைக்க அப்போதும் அவருக்கு தோல்வி தான்.

பயமோ பித்தாடா வைக்க, “என்ன மங்களம் மொபைலை எடுத்தாப்புலையா..?” கேட்டவாறு ரெயின் கோர்ட் ஒன்றை அணிந்துக் கொண்டு வந்தார் திருத்தனி.

“இல்லைங்க. எனக்கு ரொம்ப பயமா இருக்கு. மணி ஒன்பதாகுது.  நாலு மணிக்கு ஆரம்பிடிச்ச மழையும் விடாம பெய்ஞ்சுட்டே இருக்கு. எங்க பார்த்தாலும் தண்ணி காடுன்னு சொல்லுறாக. கரென்ட் வேற இல்லை. எப்படி வரப் போறாளோ தெரியலையே..?”

“சரி நானே போய் என்னென்னு பார்த்துட்டு வந்துறேன்...”

“இந்த மழையில நீங்களா..? அப்பறம் உங்களை யார் தேட..! ஏற்கனவே நான் அவளை நினைச்சி தவிக்கிறேன். இதுல நீங்க போய் ஏங்க இப்படி என் தவிப்பை கூட்டுறீங்க..?

“வேற வழி இல்லை மங்களம். பொட்டப்புள்ளையை கொட்டுற மழையில எப்படி விட முடியும்...”

“இங்கேயிருந்து அவ வேலை பார்க்குற இடத்துக்கு போக ஒரு மணி நேரமாகும். கூட வேலை பார்க்குற யாரோட நம்பரும் இல்லை. அவளோட ஆபிஸ் நம்பரு ஏதாவது ரூம்ல இருக்கான்னு போய் பாருங்க. அதுக்காவது பண்ணி பார்க்கலாம்...”

“நான் எப்படிம்மா. நீ போய் பாரு...”

“என்ன மனுஷன் நீங்க வழி விடுங்க. நானே போய் பார்க்குறேன் அவ வந்தா உடனே என்னை கூப்பிடுங்க...” கூறிக் கொண்டிருக்கவே வெளியே பலத்த இடி, ஸ்ட்ரீட் லைட் மின்கம்பி பற்றி எரிந்து அணைந்தது.

“ஐயோ..! அம்மா. என்னங்க  என்ன இதெல்லாம். பயமா இருக்குங்க...” கணவனின் கரங்களை இறுகப் பற்றி தவிப்போடு கூற, கேட்டில் நின்றிருந்த திருத்தனியின் பார்வையோ வீதியில் தான் இருந்தது.

 அன்றில் அவனோ Onde histórias criam vida. Descubra agora