"அதனால, தயவுசெய்து என்னைப் பிடிக்கலைன்னு சொல்லிடுங்க, ப்ளீஸ்..."
தன்முன்னால் நின்று கெஞ்சுதலாகக் கேட்கும் பெண்ணை, ஆனந்தமான பார்வையோடு நிமிர்ந்து பார்த்தான் அவன்.
"தேங்க்ஸ் சோ மச். நான் வரேன்."
**************
"என்னைப் பிடிக்கலைன்னு சொல்லிடுங்க."
நிறைய தமிழ்ப் படங்கள்ல கேட்ட டயலாக் தான் இது. பொண்ணு இதை சொன்னாலும் கேட்காத மாப்பிள்ளை அவளையே கல்யாணம் பண்ணிக்குவாரு. கடைசியில காதலிக்கவும் வச்சிடுவாரு.
ஆனா, ஒருவேளை, தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முதலாக, "என்னைப் பிடிக்கலைன்னு சொல்லிடுங்க"ன்னு சொல்ற பொண்ணுகிட்ட, "சரி, வரேன்"னு சொல்லிட்டு அவன் கிளம்பிப் போயிட்டா? என்ன ஆகும்? இதைத் தான் அவள் எதிர்பார்த்தாலும், இந்த முடிவு அந்தப் பொண்ணுக்கு நல்லதா இருக்குமா?
காண்போம்... கதையில்!
***********************
Hi everyone!! Hope you are all doing well.
கடந்த இரண்டு கதைகள்லயும் ஒரே வெட்டுக்குத்தா இருந்துடுச்சு.. நான் என்ன டைப் கதாசிரியர்னே எனக்கு மறந்து போச்சு!!
சோ, இம்முறை, முழுக்க முழுக்க, லவ் மட்டுந்தான்!! A feelgood story, with heartwarming scenes and cute characters. A return to my starting point. A try to anchor me to the plane of romance.
எதுக்காக இந்த திடீர் முடிவு? ஆசை யாரை விட்டது!! எனக்கும் இந்தமாதிரி, cliche ஆன, acute angled ஆன கதை ஒண்ணு எழுதணும்னு விருப்பம். அரைச்ச மாவையே அரைச்சாலும், இதுல cringe எதுவும் இல்லாம, இயல்போட பொருந்தினமாதிரி கதையெழுத முடியுமான்னு பாக்க ஆசை. அத்தோட கொஞ்சம் பணக்கஷ்டம் வேற.. (ஹிஹி!) நீயன்றி வேறில்லை மாதிரி கதைக்கு, selected readerbase மட்டும தான் கிடைக்குது. அதாவது, பெரும்பாலான மக்களுக்கு, அதுமாதிரி hybrid கதைகள் பிடிப்பதில்லை, அதனால் படிப்பதில்லை.
இந்தக் கதை.. முட்டிமுட்டி எக்ஸாம்க்குப் படிச்சிட்டு இருந்தப்ப மூளைக்குள்ள குடைஞ்ச கதை. Stress coping mechanismஆக நான் மனசுக்குள் வடித்த கதை. காதல் மட்டுமே வார்த்தைக்கு வார்த்தை வர்றதுபோல செதுக்கினது. Warning, it'll be so cliche that you will feel like you've already read it before!!! ஆமா, காலங்காலமா நூலுலகம் exploit பண்ணிக்கிட்டு இருக்கற ப்ளாட் ஒண்ணுதான் இதுவும். என்னுடைய பாணியில் இருக்கும் என்பதைத் தவிர, புதிதாக, பெரிதாக எதுவும் இருக்கப்போவதில்லை.
கதைக்கான இன்ஸ்பிரேஷனாக, யூட்யூபில் பார்த்த ஒரு தெலுங்கு வெப் சீரிய்ஸ்: 30 weds 21. கதைக்களம் இப்பவே புரிஞ்சிருக்கும்னு நினைக்கறேன், ஹிஹி!! ஆனா அட்டைக்காப்பி அடிக்காம, அதை ஜஸ்ட் ஒரு ஒன்லைனரா மட்டும் தான் உபயோகப்படுத்தியிருக்கேன். முற்றிலும் க்யூட், ஸ்வீட் மணித்துளிகளுடன் ஒரு ஜாலியான காதல் பயணம்!
காதல்னு சொன்னாலே, எனக்கு கண்முன்னால வர்றது, மணிரத்னம் சார் படங்கள் தான். அவருக்கு ஒரு ட்ரிப்யூட் மாதிரி, நம்முடைய இந்தக் கதையோட முக்கியப் பாத்திரங்களின் பெயர்!
ஆதி-தாரா.
ஓகே கண்மணி திரைக்காவியத்தின் அழகிய கதைமாந்தர்களின் பெயர். ஆனா, plagiarism எதுவும் பண்ணல. வெறும் பெயர் மட்டும் தான்.
மென்மையான, அப்பாவித்தனமான காதல் கதை. துவண்ட மனசுக்கு, மழைச்சாரல் பட்டமாதிரி ஒரு ஆறுதல், ஒரு புத்துணர்வு தரும். கொஞ்சம் புன்னகைக்க வைக்கும், கொஞ்சம் வெட்கப்பட வைக்கும். நிறைய காதலிக்க வைக்கும்.
கதையைக் காதலிக்கத் தொடங்கலாமா?
Fb, Twitter, Instagram: Madhu_dr_cool.
*Updated on every Saturday!♡
STAI LEGGENDO
காதல்கொள்ள வாராயோ...
Storie d'amoreLove and love only. A refreshing read, guaranteed.