32

744 42 31
                                    

தாராவிற்கு கல்கத்தா மீது மீண்டும் முதல் காதல் பிறந்திருந்தது.

ஹூக்ளி நதியும் ஹௌரா பாலமும் அவள் மனதைக் கொள்ளையடித்திருக்க, நகரின் அந்த அசாத்திய வேகமும், ஒளியும், துள்ளலும் அவளை நொடிக்கு நொடி அதிசயிக்கச் செய்தது. அதனோடு, தன்னோடு சேர்ந்து சிரித்து மகிழ ஓர் அழகிய குடும்பமும் தன்னுடன் இருக்க, தாராவிற்கு அம்மாலைப் பொழுது பொக்கிஷம்போல மனதில் படிந்தது.

"பாட்டிமா... போதும்! எத்தனை ஃபோட்டோ தான் என்னையே எடுப்பீங்க? நீங்களும் வாங்க.. என்னோட நில்லுங்க!"

"வரேன்டா தங்கம்.. மொதல்ல நீ நில்லு இப்டி, இந்த இடம் அழகா இருக்கு பாரு.. சன்செட் வேற சூப்பரா இருக்கு... அப்றம், ஆதித் வர்றானான்னு கேளேன்? அவனும் வந்தா ஒரு ஃபேமிலி ஃபோட்டோ எடுக்கலாம்ல?"

புன்னகை மாறாமல் கைபேசியை எடுத்துக் குறுஞ்செய்திக்கான பக்கத்தை அவள் திறக்க, அதில் அவள் அனுப்பிருந்த செய்திகள் எதற்குமே பதில் வராதிருக்க, கொஞ்சமே கொஞ்சம் சோர்ந்தது மனது. இருப்பினும் தளராமல், 'சன்செட் ரொம்ப அழகா இருக்கு.. நீங்க எப்போ வருவீங்க?' என மீண்டுமொரு செய்தி அனுப்பிவிட்டுக் காத்திருந்தாள்.

உஷா இரண்டு கைக்கொள்ளாத அளவுக்கு பட்சணங்கள் வாங்கி வந்தார்.

"தாரா, உனக்கு பொரி பிடிக்குமா? கொல்கத்தாவுல, பொரியை வெச்சு ஜல்மூரி அப்டினு ஒரு சாட் செய்வாங்க.. இனிப்பும் புளிப்பும் காரமும் கலந்து செம்மையா இருக்கும்.. சாப்பிட்டுப் பாரேன்"

"அத்தை.. உங்களுக்குத் தெரியாத விஷயமே கிடையாதா என்ன!? இல்ல, வரும்போதே கல்கத்தா பத்தி ரிசர்ச் எதும் பண்ணிட்டு வந்தீங்களா?"

மாதவன் பலமாகச் சிரித்தார்.

"உங்க அத்தைக்கு ஜாகரஃபி ஆர்வம் ஜாஸ்தி.. அத்தோட சாப்பாட்டு ஆர்வமும்! அதுனால, எந்த ஊர்ல எது ஃபேமஸ்னு எல்லாமே அத்துப்படி!"

"அப்டியா? நிஜமாவா மாமா?"

அவர் சிரிப்புடன் தலையசைக்க, உஷாவோ அதிருப்தியாக முறைக்க, சிரிப்புடன் அவர்களை அழைத்துச்சென்று நிற்கவைத்துப் புகைப்படங்கள் எடுக்கச்செய்தாள் அவள்.

காதல்கொள்ள வாராயோ...Where stories live. Discover now