ஐந்தரை மணிக்குத் தனது நிறுவனத்தின் அலுவலகக் கட்டிடத்திற்குள் ஆதித் நிவேதன் நுழைய, வெளியே தனது இருக்கையில் இருந்த ராஜீவ் அவனைக் கண்டதும் எழுந்து ஓடிவந்தான்.
"வெல்கம் பாஸ்! பத்து நாளா ஆளையே பார்க்க முடியல.. பாட்டிக்கு இப்ப எப்படி இருக்கு? எல்லாம் ஓகேதான?"
தனது கண்ணாடி அறைக்குள் நுழைந்து, கதவை சாத்திவிட்டு ராஜீவைத் தீவிரமான பார்வையுடன் ஏறிட்டான் அவன்.
"பாஸ்... என்ன ஆச்சு? என்ன ப்ராப்ளம்? வீடியோ கால்ல நல்லாத் தானே பேசுனீங்க? கம்பெனியில எந்த பிரச்சனையும் இல்லையே... டீலர் யாராச்சும் ஃபோன் பண்ணாங்களா? இல்லன்னா--"
"ராஜீவ். ஐம் மேரீட்."
இருகணங்கள் கழித்தே அவன் சொன்னதன் முழு அர்த்தமும் புரிந்தது ராஜீவுக்கு.
"என்ன சொல்றீங்க பாஸ்!? கல்யாணமா? உங்களுக்கா?? எப்போ நடந்தது??"
"நேத்து."
"வாவ்-- ஐ மீன், வாட்??"
நடந்ததை சுருக்கமாகச் சொன்னான் அவன்.
"இப்ப என்ன பண்றது?"
ராஜீவ் ஆழ்ந்த யோசனையில் இருப்பதைப் போல நின்றான்.
"ஹ்ம்ம்.. கல்யாணமான பிறகு, வழக்கமா ஹனிமூன் போவாங்க. நான் வேணா சிம்லா, மால்தீவ்ஸ், இல்லன்னா சிங்கப்பூர்ல ஹோட்டல் பாக்கட்டுமா சார்?"ஆதித் முறைக்க, ராஜீவ் நிறுத்திக்கொண்டான்.
"ப்ச், I actually had a plan. அவளை அங்கேயே விட்டுட்டு, நான் மட்டும் கொல்கத்தா வந்துடலாம்னு நினைச்சேன். பாட்டி விடலை. இப்ப அவளையும் கூட்டிட்டு கொல்கத்தா வரவேண்டியதா போச்சு."
ராஜீவ் லேசாக சிரித்தான்.
"யார் பாஸ் உங்களுக்கு இப்படியொரு மொக்கை ஐடியாவைத் தந்தது? கல்யாணம் பண்ணிக்கிட்ட பின்னால, என்ன காரணம் சொல்லி உங்க வொய்ஃபை விட்டுட்டு நீங்க மட்டும் இங்க தனியா வருவீங்க? பெரியவங்க யாரும் கேள்வி கேக்கமாட்டாங்களா என்ன?"நகுலை மனதுக்குள் நன்றாகத் திட்டியவன், "அப்போதைக்கு அதுதான் சரின்னு தோணுச்சு. வேற எதுவும் செய்ய முடியாத சூழ்நிலை" என்றான் ராஜீவிடம்.