37

790 45 11
                                    

ஆதித்திற்குத் தன்னை நினைத்தே கோபமாக வந்தது.

'உன்னிடம் நட்பை மட்டுமே எதிர்பார்க்கும் சின்னப் பெண்ணிடம், எப்படி உரிமைகள் எடுத்துக்கொள்ள மனது வருகிறதோ உனக்கு! ஒருவேளை தவறாக ஏதேனும் நடந்திருந்தால் என்னவாகியிருக்கும்!?'

ஆற்று மணலில் நடந்து காற்று வாங்கும்போது, பனிப்பட்டு அவள் சிவக்க, மனது அவன் பேச்சைக் கேட்காமல் அலைபாய்ந்து, அந்தப் பட்டுக் கன்னங்களைத் தொட்டுப் பார்க்கவேண்டும்; மூக்கின் நுனியைப் பிடித்துக் கொஞ்சவேண்டும் என்றெல்லாம் அடம்பிடிக்க, சட்டென அதிர்ந்தவன் பத்தடி விலகி நின்றான் அவளிடமிருந்து. தனக்குள் நடக்கும் மாற்றங்களின் காரணத்தை அறியாமல் அவன் தடுமாற, அவள் முகத்திலோ காயம்பட்ட உணர்வொன்று அரைக்கணம் வந்துசென்றது.

'பாட்டியும் பெற்றோரும் சேர்ந்து நடத்தும் விளையாட்டு இது. இதில் இருவருமே பகடைக் காய்கள் தான். நடுவே இம்மாதிரி எண்ணங்களுக்கு இடம் தராதே ஆதித்! தவறு இது!'

வாய்பேசாமல் அவளைத் திரும்ப அழைத்துக்கொண்டு வீடுசேர்ந்தவன், தன்னறைக்குத் தனிமைதேடிச் செல்ல நினைக்க, அதுவும் முடியாமல் வீட்டிலிலுள்ள பெரியவர்கள் இடைநிற்க, கோபமாகக் குளியலறைக்குள் சென்று கதவடைத்துக்கொண்டான் ஆதித்.

அரைமணி நேரம் குளிர்ந்த ஷவரின் அடியில் நின்று தன்னை சமன்படுத்திக்கொண்டு, தாராவிடம் மன்னிப்போ, சமாதானமோ கேட்க நினைத்து அவள் நின்றிருந்த பால்கனியை நோக்கி அவன் விரைந்தான். ஆனால் எதிர்பாராவிதமாக அவளும் அதே நேரம் அவனைத்தேடி வர, அவள்மீது மோதிவிட்டான் அவன்.

அவள் தடுமாறி விழப்போகவும் அனிச்சையாக அவன் கைகள் வேலை செய்து அவளது இடையைச் சுற்றிப் பிடித்து அவளை விழாமல் தடுத்திருக்க, அதேபோல அவளும் பதற்றத்தில் அவன் தோள்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள, அந்த அசாத்திய சூழலில் இருவரின் மனங்களும் படபடத்தன. என்ன செய்யவெனத் தெரியாமல் இருவரும் செயலற்று நிற்க, தாராவின் கைபேசிச் சத்தம் உரக்க அடித்து இருவரையும் திகைக்கச் செய்தது.

காதல்கொள்ள வாராயோ...Where stories live. Discover now