Hi everyone!
Merry Christmas and A Happy New Year!
ஆர்வமா கதையோட அடுத்த அத்தியாயம்னு நினைச்சு வந்தவங்களுக்கு.. ஹிஹி.. சாரி..
வாழ்க்கை நம்மளை புரட்டியெடுக்கற நேரத்துல, ஆறுதலுக்காக கலைகள் பக்கம் திரும்புவோம் அல்லவா? அதுமாதிரி, புதுசா ஒரு ஹாபியை கண்டுபிடிச்சேன் நான், எக்ஸாம் எழுதி கை ஓடிஞ்ச நேரத்துல. அதுதான் இந்த mood board. Aesthetics, Pictorial storytelling, Character bios என நிறைய பெயர்கள் கொண்ட ஒரு விஸ்காம் வேலை!
நம்ம கதைக்காக செஞ்ச சில edits.. (அதாவது, கதைமாந்தர்களே தங்களைப் பற்றி mood board உருவாக்கினா எப்படி இருக்கும்னு யோசிச்சு செஞ்சது) இதோ:
தாரா.. பூக்கள், ஹௌரா ப்ரிட்ஜ், ஆரஞ்ச் ஜூஸ், ஏரோப்ளேன்... க்யூட்!
ஆதித்... No nonsense, strictly business! அவன் லப்ரா பிடிக்கும்னு சொன்னதால அதுவும் ஒரு மூலைல. (அப்போ.. குட்டியா இன்னொரு மூலைல இருக்கறது யாராம்?)
அபிமன்யூ என்கிற மனு! டைரக்டர் என்பதால் கலைத் திறமையும் கொஞ்சம் ஜாஸ்தி. அதான் பளிச்னு இவ்ளோ அழகா, கலையம்சத்தோட இருக்கு போர்ட்.
ராஜீவ்க்கு இருக்கற வேலை டென்ஷன்ல, மூட் போர்ட் செய்யச்சொன்னா செய்வானான்னு நினைச்சேன்.. ஆனா எல்லா வேலையைப் போலவே இதையும் நேர்த்தியா செஞ்சிருக்கான்.
ஷீத்தல்.. தன்னோட முழுநேர வேலையாகவே அழகுக்கலையை செய்யற அளவு ஆற்றல் இருந்தாலும், மெக்கானிக்கல் மீதும் மையல் என்பதால் இரண்டும் கலந்த போர்ட்.
வெட்டியா எதுக்கிந்த வேலைன்னு கேட்கறீங்களா.. சும்மா, ஸ்ட்ரெஸ்ஸை குறைக்கத் தான். எத்தனை நேரம்தான் புக்கும் கையுமாவே இருக்கறது? மூளை சூடாகிவிடாதா? அதான் இப்படி கொஞ்சம் பொழுதுபோக்காக.
அடுத்த அத்தியாயத்தை அடுத்த வருடம்தான் அப்லோட் பண்ணவேண்டும் என உறுதியோடு இருக்கிறேன். பார்க்கலாம், செயல்படுத்துவேனா என்று!
அதுவரை உங்களிடமிருந்து விடைபெறுவது...
மது.