உனக்கென்ன நான்.. காதல் சித்திரம்..11

223 32 5
                                    

🔱யின்
❤Kகாதல்🔱Cசித்திரம் ❤

❤சித்திரம்.. 1️⃣1️⃣..

🌹என்ன நடதுன்னு நான் சொல்றேன்....என்று ஓரு பெண்ணின் குரல் கேட்க முல்லை பயந்து போனவள் கதிரின் பின் ஒளிந்து கொள்ள🌹

கதிர் : ருச்சி நீ  எப்படி இங்க...

ருசி : ஏய் கதிர் மாமா.....அந்த ராஜ பரம்பரையை சேர்ந்த ராணி இவுங்க தானே...

கதிர் : ஆமா இவ தான் வேத ராணி முல்லை... நான் தான் உனக்கு போட்டோ காட்டி இருக்கேனே...

ருசி : ம் .....தெரியும் அப்பவே நினைச்சேன் ஆனா...

கதிர் : ஏய் என்ன டி என்ன பிரச்சனை நீ எப்படி இங்க...

ருசி : இல்ல மாமா நான் ஒரு கேஸ் விஷயமா போலீஸ் ஸ்டேஷனுக்கு போய் இருந்தேன்...அங்க நம்ப  எக்ஸ் எம்எல்ஏ கரிகாலனுடைய தங்கச்சி சவுண்ட் சரோஜா இருக்கா இல்ல...

கதிர் : யாரு..

ருசி : அதான் மாமா நம்ப மயில் கேசை விசாரிக்கும்போது தெனாவட்டா பேசினாலே அந்த asi சவுண்ட் சரோஜா

கதிர் : ஆமா அவளுக்கு என்ன கெடு

ருசி : அவ ஸ்டேஷன்க்கு ஒரு வீடியோ வந்துச்சு மாமா.....அந்த வீடியோவில் இதோ நிற்கிறாங்களே உன் ராணி அவங்க எக்ஸ் எம்எல்ஏ கரிகாலன் முகத்துல எண்ணெயை தூக்கி ஊத்திட்டாங்க

கதிர் : என்ன எண்ணெயை தூக்கி ஊத்திட்டாளா....என்னடி சொல்ற ஏய் முல்லை என்ன ஆச்சு

🌹முல்லை பிரமை பிடித்தது போல் நின்றிருக்க🌹

கதிர் : ஏய் உன்னை தான் ஏன் என்ன ஆச்சு கேக்குறன் இல்ல

ருசி : ஏய் லூசு மாமா...அங்க என்ன வேணும்னாலும் நடந்தது இருக்கலாம்.. ஆனா அவங்க கையில் சாட்சி இருக்கு அந்த வீடியோவில் இவங்க அந்த கரிகாலன் முகத்தில் எண்ணெயையை ஊற்றிய வீடியோ இருக்கு...அவங்க அத வச்சு தான் கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க

கதிர் : என்னன்னு கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க

ருசி : இந்த பொண்ணு அங்க மண்டபத்துல இருக்கிற மனபெண்ணின் நகையை திருடியதாகவும்...அதைக் கேட்கப் போன இடத்திலே இந்த பொண்ணு கரிகாலன் முகத்தில் எண்ணெயை ஊத்திட்டான்னு கம்பளைண்ட் வந்து இருக்கு.... so  திருட்டு பழி போட்டு கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Where stories live. Discover now