டப்பா டான்ஸ் ஆட போகுதா.. kc 38

197 34 9
                                    

🔱யின்

💕காதல் சித்திரம் 💕

❤சித்திரம் 3️⃣8️⃣

💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

கதிர் : ஏய் இரு.... நைட்டு பண்ணேண்டு மணிக்கு private நம்பர்ல இருந்து உனக்கு யார் call பண்றாங்க.... இரு நான் எடுக்குறேன்........ hello.....

🌹என்று கதிர்.... முல்லைக்கு வந்த அழைப்புக்கு பதில் சொல்ல போக 🌹

முல்லை : விக்ரா அது என்னுடைய போன் தானே என் போனைக் கொடு

கதிர் : இது உன் போனுன்னு எனக்கு தெரியுது... இந்த நேரத்தில உனக்கு யார் போன் பண்றாங்க..

முல்லை : எனக்கு யார் போன் பண்ணா உனக்கு என்ன இப்ப நீ போன குடுப்பியா மாட்டியா

🌹என்று சொன்னபடி முல்லை போனை அவன் கையிலிருந்து தன்வசம் பிடுங்க போக.....போன் கீழே விழுந்து ஸ்விட்ச் ஆஃப் ஆக🌹

முல்லை : (மனதிற்குள்) நல்லதா போச்சு..போன் கீழ விழுந்துருச்சு.. ஐயோ இப்போ வேற இவன் கேள்வி கேப்பான்னே என்ன பண்றது

கதிர் : ஏய் என்னடி வாய்க்குள்ளேயே வடை சுட்டுக்கிட்டு இருக்க.... ஏய் கேக்குறேன்ல உனக்கு இந்த நேரத்தில் யார் போன் பண்றாங்க

முல்லை : அது....... அங் அது வந்து ஒருவேளை என் மாமா மருது வா இருக்கும்

கதிர் : அவன் எதுக்கு உனக்கு போன் பண்ணனும் அதுவும் இந்த நேரத்தில்

முல்லை : ஒரு வேல எங்க கல்யாணத்தை எப்போ வெச்சுக்கலாம்னு கேக்குறதுக்கு போன் பண்ணி இருப்பாரு...

கதிர் : என்னது கல்யாணமா...அப்போ காலையில நடந்ததுக்கு பேர் என்ன

முல்லை : அது ஒன்னும் கல்யாணம் இல்ல... நீ பாட்டுக்கிட்டு வழியில இருக்குற தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கிற ம... ம....... மாதிரி உள்ள கைய உட்டு தாலியை எடுத்துக் காட்டிட்டா அது கல்யாணம் ஆகாது புரியுதா.... என்ன பாக்குற சரி சரி நேரமாகுது முதல்ல இடத்தை காலி பண்ணு

கதிர் : ஏய் நீ பேசமாத்தாதே... இப்போ உனக்கு போன் பண்ணது யாரு...இப்ப மட்டும் இல்லடி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இதே மாதிரி பிரைவேட் நம்பர்ன்னு ஒரு போன் கால் வந்துச்சி நான் எடுத்து பேசினதுக்கு.... அவன் என்னமோ கருமாதிக்கு தேதி குறிக்கவா அப்படி இப்படின்னு ஒரு குரல்...... ஆனா அந்த குரலை நான் எங்கேயோ கேட்டிருக்கேன்.....சொல்லு யாரு உன்ன மிரட்டுறாங்க...உனக்கு என்ன பிரச்சனை

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Where stories live. Discover now