kc...28..

169 41 9
                                    

🔱யின்.. ❤காதல் சித்திரம்❤

❤சித்திரம்..️2️⃣8️⃣

🌹முல்லை........தனக்கும் மருதுவிற்க்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்று சொன்ன அந்த ஒரு சொல்லை தாங்கிக்கொள்ள முடியாத கதிர் மறு வார்த்தை எதுவும் பேசாமல் தன்நிலை மறந்து மாடிக்கு சென்றவனை உதயா
பின்தொடர🌹

உதயா : அண்ணா.....உன்ன தான்... இங்க பாரு....அவங்களுக்கு வேற ஏதும் பிரச்சனை இருக்கு போல நீ எதையும் நினைச்சு கவலைப் படாத.... உன்னுடைய காதல் உண்மையானது அவங்க என்னைக்குமே உனக்கு தான் சொந்தம்

🌹என்று உதயா சொல்ல....கதிர் எதுவும் பேசாமல் அமைதியாக கீழே சிதறிக் கிடந்த கண்ணாடி துண்டுகளை பார்த்தபடி நின்று இருக்க🌹

உதயா : அண்ணா நீ கொஞ்ச நேரம் வெளியே நில்லு....நான் உன்னுடைய ரூமை சுத்தம் பண்ணிட்டு சொல்றேன் அப்புறம் உள்ளவா

🌹என்று உதயா சொல்ல....கதிர் வெளியே போனவன்...
கிட்டத்தட்ட....நான்கு வருடத்திற்கு முன்பு தனக்காக நிச்சயிக்கப்பட போகும் பெண் என்று யோகி பாபு அனுப்பிய புகைப்படத்தில்..... முல்லையின் சித்திரத்தை பார்த்ததும் அவளின் அழகில் மெய்மறந்து போன நினைவை.....இன்று நினைத்துப் பார்த்து கண்கள் கலங்கியபடியும்.....இதே மொட்டை மாடியில் அவளுடன் எத்தனையோ நாட்கள் சண்டையிட்டும் கட்டிப்பிடித்தும்..வார்த்தைக்கு வார்த்தை எதிர்ப் பேச்சு பேசியும் கலாட்டா செய்ததையும் ஆறாவரம் பண்ணதையும் நினைத்துப் பார்த்தவன்னின் கண்களில் அதிகமாக கண்ணீர் பெருக......அரை மணி நேரம் கடந்த நிலையில் 🌹

உதயா : அண்ணா அண்ணா......எங்க போனாரு...

🌹 என்று உதயா கதிரின் அறையிலிருந்து வெளியே வந்து கதிரை தேட.....கதிர் மொட்டை மாடியில் இல்லை..... சிறிது நேரத்தில் லாஸ்லியாவும் கவினும் மொட்டை மாடிக்கு ஏறி
வந்தவர்கள்🌹

லாஸ்லியா : டேய் நீ இங்கதான் இருக்கியா....வாசலில் உன் வண்டியை காணமே.....

உதயா : அய்யய்யோ வண்டி இல்லயா... அண்ணா எடுத்துட்டு போயிடுத்தா.....

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Donde viven las historias. Descúbrelo ahora