இதுவும் கடந்து போகும்... kc..30

174 34 8
                                    

🔱யின்
❤காதல் சித்திரம்❤

❤சித்திரம்...3️⃣0️⃣

முல்லை : விக்ரா.....என்னுடைய தங்கச்சிய நான் காப்பாத்தணும்.....
அதோடு உன் அந்தஸ்துக்கும் நான் தகுதி இல்லாதவள்.... இப்படி எல்லாமே என்னை உன்கிட்ட இருந்து பிரிச்சுடுத்து விக்ரா.....ஆனா நீ நல்லா இருக்கனும்.... எனக்காக நீ கடை வண்டின்னு எவ்வளவு செஞ்சியிருக்க.....சந்தோசமா இருக்கு விக்ரா... ஆனா எனக்கு இது எதுவும் வேணாம்..... நான் எப்படி வந்தேனோ அப்படியே போறேன்....உதயா நீ குடிச்சா உனக்கு மறுநாள் எதுவும் நியாபகம் இருக்காதுன்னு சொன்னதால் தான் நானே வந்து இப்போ உன்கிட்ட பேசுறேன்...... இனிமே குடிக்காத விக்ரா... எனக்கு ரொம்ப கஷ்ட்டமா இருக்கு....உன்னை.... உன்னை நான் ரொம்ப......

🌹என்று கதிரின் இதயத்தில் சாய்ந்து கொண்டு முல்லை அழுது
கொண்டிருக்க...🌹

dr. அனிதா : அப்போ இதெல்லம் நடிப்பா.......உன் தங்கச்சிக்காக தான் நடிக்கிறியா.....

முல்லை : நீங்க எங்க இங்க

dr அனிதா : அது இருக்கட்டும் நீ என்ன சொன்ன இப்போ உன் தங்கச்சிக்கு என்ன பிரச்சனை..

முல்லை : என்ன பிரச்சனையா யார் யார் சொன்னது அதெல்லாம் ஒண்ணும் இல்லையே..நான் கீழே போறேன்...

dr. அனிதா : ஏய் நில்லு... இப்போ என்ன விஷயமன்னு சொல்றியா இல்ல நான் என் தம்பியை எழுப்பவா...

முல்லை : ஐயோ வேணா வேணா விக்ராவை எழுப்பாதீங்க...நான்... வந்து சும்மா தான்

dr. அனிதா : எது சும்மா.... இங்க பாரு என் தம்பிக்கு கொஞ்சம் ஹெல்த் issue இருக்கு... என் பிள்ளை மயில் இறந்ததுக்கு அப்பறம் இவன் குடிக்கு அடிமையாகிட்டான் அவனை அந்த நிலைமையில் இருந்து மீட்க இவன் friends எவ்வளவு கஷ்டப்பட்டாங்க தெரியுமா...

முல்லை : இல்லிங்க நான்..... நானே இன்னும் ரெண்டு மாசத்துல இந்த ஊரை விட்டுப் போய்விடுவேன் அப்புறம் என்னால உங்க தம்பிக்கு எந்த பிரச்சனையும் வராது

dr அனிதா : நீ என்ன லூசா...அவன் மூணு வருஷத்துக்கு முன்னாடியே உன்னை நினைத்து பாதி பைத்தியம் ஆயிட்டான்..
இப்ப கொஞ்ச நாளா நீ அவன் கிட்ட பேசி பழகும் பொழுது தான் அவன் சந்தோஷமா இருக்கான்...நான் எதிர்த்த வீட்டில் இருந்தாலும் இங்கே என்ன நடக்குதுன்னு நான் பார்த்துக்கிட்டே தான் இருப்பேன்...என்னுடைய சூழ்நிலை என் வீட்டுக்காரரை பகச்சிகிட்டு என்னால எதுவும் செய்ய முடியல.....அதுக்காக என் தம்பியின் சந்தோஷத்தை நீ குழிதோண்டிப் புதைக்கிரதை நான் பாத்துகிட்டு இருக்க மாட்டேன் புரியுதா...ஒழுங்கா நாளைக்கு காலையில உன் காதலை அவன்கிட்ட தெரியப்படுத்து...

❤K. காதல்🔱C.சித்திரம்❤(part 1)Where stories live. Discover now