"ஏய்... அங்க என்ன வேடிக்கை?? கடைக்கு வந்த கஸ்டமர கவனி."ம்ச்.. இவருக்கு வேற வேலையே இல்ல.. என்ன திட்டலனா நாள் ஓடாது போல...
" சனி சார்... சாரி .. சரி சார்.. "
இந்த குரலுக்கு சொந்தக்காரி.. சாரதா!! குரல்ல இவ்ளோ நக்கல் இருந்தாலும்.. துயரத்தின் உச்சக்கட்டத்துல தான் இவ இருந்தா..
22 வயசு..
5.5' அடி..
53 கிலோ வெயிட்..
கலையான முகம்..
பல்லாயிரக்கணக்கான புதிர் போடும் கண்கள்..
ஒளிரும் விளக்கு அணைந்தது போன்ற களையிழந்த உடம்பு. ஆனா அவள் முகம் மட்டும் எப்பவும் பிரகாசமாயிருப்பதற்கான காரணம்.. தன் சோகம் யாருக்கும் பாரமாகிவிடக்கூடாது என்பதற்காக..
மதுரையில் ஒருவளர்ந்து வரும் ஜவுளி கடையில் பணிபுரிகின்றாள்.. மாதம் 9000 சம்பளம்..இந்த வேலை மதியம் 2 இல் இருந்து இரவு 10 வரை.
காலைல.. ஒரு வீட்டுக்கு வேலை செய்ய போய்ருவா.. அங்க சம்பளம்.. 5000 ரூபாய்.. சாப்பாடு முதற்கொண்டு எல்லா வேலையும் செஞ்சிருவா..
கூட வேலை பார்க்கிற மதிங்குற ஒரு பொண்ணு வீட்ல தான் மாச வாடகை 3000 க்கு இருக்கா..
அவளுக்கு ஏன் வீடு இல்லை ன்னு யோசிக்கிறீங்களா??
இருந்தது..
அழகான வீடு...
அன்பான அப்பா..
அரவணைப்பான அம்மா...
அதட்டும் தம்பி...
இதெல்லாம் விட்டுட்டு ஏன் இங்க இருக்கான்னு யோசிக்காதீங்க.. நேரம் வரட்டும்..
.....
.....
"மேடம்.. உங்களைத்தான்.."பழைய நினைவுகள் வந்ததால.. சுயநினைவை இழந்து நின்ன என்னை.. கஸ்டமரின் குரல்.. இந்த பாழாபோன உலகத்திற்கு அழைத்தது..
"சாரி.. சொல்லுங்க மேடம் ..என்ன வேனும்??"
" 10,000 ல இருந்து.. 15000 க்குல்ல நல்ல நல்ல பட்டுப்புடவையா எடுத்து போடுங்க".
YOU ARE READING
காதலில் விழுந்தேன்!!
Teen Fictionநாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. ப...