சாராவின் கூற்று:ராஜி பேச பேச எனக்கும் மதிக்கும் வேர்க்க ஆரம்பிச்சிருச்சு.. இதெல்லாம் சொல்லி முடிச்சிட்டு அவ கடைசியா ஒரு பெரிய மூச்சு விட்டுட்டு சொன்னது..
"என்ன இங்க இருந்து எப்படியாச்சும் காப்பாத்துங்க டீ"
" இப்ப எங்கடீ இருக்க??"-மதி
" எனக்கு தெரில டீ!! இவன் கூட இருக்க ஒவ்வொரு நிமிஷமும் எனக்கு நரகம் மாதிரி இருக்குடீ.. "
" ராஜி, வர்ற வழியில எதாச்சும் காலேஜ் , பெரிய கோவில் பார்த்தியா?? இல்ல பக்கத்துல எதாச்சும் லான்ட் மார்க் இருந்தா சொல்லு டீ." - நான்.
"எனக்கு தெரிஞ்சு.. " கொஞ்சம் யோசிச்சிட்டு " ஹே, இங்க இருந்து ஒரு 15 மினிட்ஸ் தூரத்துல st.ஜோசப் காலேஜ் ஃபார் கேர்ள்ஸ் ன்னு இருந்துச்சு டீ.. அங்க தான் என் கண்ணுல கட்டு கட்டினான். கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்துட்டோம் .இந்த வீடு பக்கத்துல எந்த வீடும் இல்லடீ. மெயின் ரோடுல தான் இருக்கு. பிங்க கலர் பெயின்ட் டீ.. சீக்கிரம் எப்படியாச்சும் காப்பாத்துங்க டீ. "
" சரி ராஜி.. ஊரு பேரு எதாச்சும் தெரியுமா டீ??"-மதி
" அது தெரில.. மதி.. ஷங்கர் வண்டி ஸவுண்ட் கேக்குது டீ . மாட்டினா என்ன கொன்னே போட்டுருவான். பை டீ"
" ஹலோ..ராஜி.. ஏய்..."
நாங்க பேசுறத கேக்குறதுக்குள்ள ஃபோன வச்சிட்டா .
" மதி. என்ன பண்றது?? "- நான்
" நாம எப்படி டீ காப்பாத்துறது??யார்ட்ட கேக்க?? ஒன்னும் புரில டா."
"ராஜி.. போலீஸ் ட போலாமா??"
" லூசா சாரா நீ.. என்னன்னு சொல்லுவ?? எப்படி இருந்தாலும் அவன் எந்த பிரச்சனையும் இல்லாம தப்பிச்சிருவான். அதுக்கப்புறம் அவங்க அப்பாவ எதாச்சும் பண்ணா??? "
" ஆமால்ல.. மதி.. நான் வர்க் பண்ற இடத்துல இருக்க பையன் கோயம்புத்தூர்ல தான் டீ படிச்சான். அவன்ட்ட போய் எந்த இடம் னு கேக்கலாமா?? "
" சரி சாரா.நீ அங்க போய் பேசு. நான் மதன்ட்ட பேசிட்டு வர்றேன்."
YOU ARE READING
காதலில் விழுந்தேன்!!
Teen Fictionநாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. ப...