ராஜி:
" மதி சாப்பிட வா. 2 நாள் ஆச்சு நீ இங்க வந்து. ஒழுங்கா சாப்பிட உனக்கு கத்துக்குடுக்கனும் போல. "
" நான் அப்புறம் சாப்பிடுறேன் டீ. நீங்க இப்ப சாப்பிடுங்க."மதி
" யம்மா மதன் வேற நூறு தடவ ஃபோன் பண்றான் நீ சாப்பிட்டியான்னு. அவனுக்கு நான் பதில் சொல்லனும் . வா."- நான்.
" அவனுக்கு நான் எப்படி போனா என்ன?? "
" நீ இப்படிலாம் சொன்னா அவ கேக்கமாட்டா. போய் சாப்பாட இங்க எடுத்திட்டு வந்து குடு"- ஷங்கர்.
கஷ்டபட்டு அவள சாப்பிட வைக்கிறதுக்கே எனக்கு இப்போலாம் நேரம் போதல.
" நீ போய் ஷங்கருக்கு சப்பாடு போடு. நான் சாப்பிட்டுக்குறேன். "
" அவன் சாப்பிட்டா .. ம்ம் அவர் சாப்பிட்டுப்பார் டீ. "-நான்.
முன்னாடிலாம் அவர் தான் சமைப்பார். இப்போ நான் தான். ஒரு மாசமா நான் தான் இதெல்லாம் பார்க்குறேன். முதல்ல நீ செய்யவேண்டாம்னு முரண்டு பிடிச்சாரு. அப்புறம் விட்டுட்டார். ஆனா அவர சீக்கிரம் இழந்திடுவேனோங்குற பயம் என்னை சுத்தி சுத்தி வருது .
ஏன்னு கேக்குறீங்களா??
நான் சாப்பிட்டேனான்னு முன்னலாம் ராணி அக்கா ட்ட டெய்லி கேப்பார். ஆனா இப்ப சுத்தமா என்ன கண்டுக்குறது இல்லை.
என்னாச்சுன்னு தெரில.
" என்னாச்சு ராஜி??" மதி
" ஒன்னுமில்லை டீ. சாரா எப்படி இருக்கான்னு யோசிச்சேன்.ஈவ்னிங் போல அவளுக்கு கால் பண்ணி பேசலாம் டீ. "நான்
" நீ பேசு. நான் பேசல டீ. கல்யாணம் ஆனத ஒரு வார்த்தை கூட யாருமே என்கிட்ட சொல்லல. "-மதி
" தப்பு தான் டீ. ஆனா நடந்து முடிஞ்சத பத்தி எதுமே பேசமுடியாது மா. உன் அளவுக்கு எனக்கும் அவ மேல ரொம்ப கொவம் இருக்கத்தான் செய்யுது.என்ன பண்ண முடியும். நம்ம யாருக்கும் மணவாழ்க்கை சரியா அமையல. நம்ம ராசி அப்படி போல. "- சொன்னதுக்கு அப்புறம்தான் ஒரு விஷயத்தை உணர்ந்தேன்.
YOU ARE READING
காதலில் விழுந்தேன்!!
Teen Fictionநாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. ப...