சாராவின் கூற்று:
"அவ மட்டும் என் கையில கிடைச்சான்னா அவ்ளோதான் ராஜி. எனக்கு வர்ற கோவத்துக்கு.."-நான்.
மதி ,ஷங்கர்ட்ட பேசுனதெல்லாம் சொன்னதுக்குதான் இந்த ரியாக்ஷன். கெம காண்டு ஆகுது.
"இவ்ளோ விஷயத்தை மறைக்க அவளுக்கு எப்படி டீ மனசு வந்துச்சு??"-நான்.
மதி எகத்தாளமா என்ன பார்த்து சிரிச்சா.புரியுது.நானும் நிறைய விஷயத்தை மறைச்சிருக்கேன்ல.
"போதும் போதும் முறைக்காத டீ. இப்ப என்ன பண்ணலாம்??"
" இனிமே அவள பத்தி கவலை படாம இருக்குறது தான் நமக்கு இருக்க ஒரே வழி. நாம அவனுக்கு சப்போர்ட் பண்றது தெரிஞ்சா நம்மகிட்ட கூட எதும் ஷேர் பண்ணாம போயிருவா டீ. அதுமில்லாம அவன் ரொம்ப நல்லவன் டீ. அவள பத்திரமா பார்த்துப்பான்."-மதி.
"மதி.. ஒருவேளை அவன் நம்மகிட்ட நடிச்சிருந்தா?? பொய் சொல்லிருந்தா??""உன் புத்தி ஏன் சாரா இப்படிலாம் யோசிக்கிது??"
"லூசு.. நமக்கு தெரியாத ஒருத்தன் ஏதோ சொல்றான்ங்குறதுக்காக நாம எப்படி அத நம்பிட்டு இருக்கமுடியும்??நமக்கு ராஜி முக்கியம் டீ"
"நம்மளவிட அவனுக்கு தான் ராஜி முக்கியம். எனக்கு அவன் மேல ஃபுல் நம்பிக்கை இருக்கு. ஏமாத்தமாட்டான். எல்லாரும் விக்கி மாரி இருக்க மாட்டாங்கடா " சொல்லிட்டு வேகமா வெளிய போய்ட்டா.
நூற்றுக்கு நூறு சதவீதம் அவ சொன்னது உண்மை. பசங்ள நம்பகூடாதுங்க. ஆனா மதி ரொம்ப தெளிவா யோசிக்கிறவ. இப்பதைக்கு அவ சொல்றத நம்பிதான் ஆகனும்.
இதெல்லாம் யோசிச்சதுல மணி 12 ஆனத கவனிக்கல. வேகமா கிளம்பி கடைக்கு போனேன். லேட் ஆனதுனால மதி ஸ்கூட்டிலயே போயிட்டேன்.
ராஜிய பத்தியே கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு இருந்தேன். அப்புறம் வேலைல கவனம் செலுத்தினேன்.
எனக்கு எதிர்க்க நாலு பசங்க மதன் இருந்த செக்ஷன்ல ஷர்ட் பார்த்திட்டு இருந்தாங்க. அதுல யாரோ என்னை பார்த்திட்டு இருந்த மாதிரி இருந்துச்சு. அந்த பையன் ஏதோ சொல்ல.. இன்னொரு பையன் என்ன பார்த்தான். வெடவெடன்னு இருந்துச்சு.
YOU ARE READING
காதலில் விழுந்தேன்!!
Teen Fictionநாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. ப...