40

4.3K 133 16
                                    

கொஞ்ச நேரம் நான் யோசிச்சிட்டு இருந்தேன் என்ன பண்ணலாம்னு . உனக்குத்தான் மதன் இருக்கானே கவலைபடாத மதி!அவன்கிட்ட சொல்லி தினமும் இத சாக்கா வச்சி வீட்டுக்கு வந்து விட்டுட்டு போக சொல்ல வேண்டியது தான்.

வாட் அன் ஐடியா மதி ஜி!

"மதி..மதி.."-அம்மா

"என்ன மா?? "

"இங்க வா ஒரு நிமிஷம்"

"ம்ம்.. சொல்லு"

"எனக்கு ஒரு சத்தியம் பண்ணு"

பெருசா என்ன கேட்டிரபோறாங்க??

"பண்றேன். என்னன்னு சொல்லு??"-நான்

"நான் உன்மேல நம்பிக்கை இல்லாம இப்படி கேக்கல. உன் நல்லதுக்கு தான்"

"சாரதா கூட பேசி பேசி.. நேரா பேசுற பழக்கமே போச்சு உனக்கு.. என்னன்னு சொல்லு வேகமா"

"யாரையும் லவ் பண்ண மாட்டேன்னு சத்தியம் பண்ணுமா.. நீ பண்ண மாட்ட... ஆனா பசங்கள நம்பமுடியாது . அதனால தான் டீ"

நான் கூட விளையாட்டா கேக்குறாங்கன்னு நினைச்சேன்.

"அதெல்லாம் பண்ண முடியாது போமா."

சொல்லிட்டே அங்க இருந்து நகர்ந்திட்டேன்.

"மதி நில்லு.. எனக்கு நீ இப்ப இந்த சத்தியத்தை பண்ணித்தான் ஆகனும்"

இது என்னடா சோதனை!! மனசுல ஒருத்தனை நினைச்சிட்டே எப்படி சத்தியம் பண்றது??

"என்ன பிரச்சனை உனக்கு?? சத்தியம் லாம் பண்ண மாட்டேன். அப்படியே ஒரு வேளை.. லவ் பண்ணாலும் நல்லவனா தான் பண்ணுவேன். "

"நீ பண்ணவே கூடாதுன்னு நான் சொல்லிட்டு இருக்கேனா நீ என்னடி நல்லவனா தான் பண்ணுவேன்னு சொல்ற??"

"இப்ப எதுக்கு நீ இவ்ளோ சீரியஸா பேசிட்டு இருக்க .. போய் வேலைய பாரு மா""

சைக்கிள் கேப்ல எஸ்கேப் ஆக டிரை பண்ணேன். எங்க அம்மாகிட்ட அது முடியுமா??

"இப்ப நீ சத்தியம் பண்றியா இல்லையா??"

"பண்ண முடியாது மா விடு"-நான்

காதலில் விழுந்தேன்!!Where stories live. Discover now