19

4.1K 140 1
                                    

வெளில நின்னுட்டு இருந்த அவன் கார்ல ஏறினேன். ரொம்ப நேரம் டிராவல் பண்ணோம். அவன் வீட்டுக்குப்போகல.. அது நல்லாவே தெரிஞ்சது. பொறுமை இழந்து நானே கேட்டேன்.

" எங்க டா கூட்டிட்டு போற??"

" வாய மூடிட்டு வா.. "

" இவ்ளோ நேரம் அப்படிதானே வந்தேன். இல்ல எங்கேயாச்சும் போய் சாகடிக்க போறீன்னா முன்னாடியே சொல்லிறு. நான் அதுக்கேத்த மாதிரி மனசளவுல ரெடி ஆயிக்கிறேன். "

"அடச்சீ... கொஞ்ச நேரம் அமைதியா வா.. இல்ல உன்ன கொன்னு உன் ஆசைய நிறைவேத்தி வைக்கிறேன்."

" நீ பண்ணாலும் பண்ணுவ.ம்ஹூம்...!"

கண்ணாடி வழியா என்ன ஒரு லுக்கு விட்டுட்டு வண்டிய ஓட்டினான். ரோட்டுல ஓரமா நிப்பாட்டினான். கீழ இறங்கி பின் டோர திறந்து என் கண்ண ஒரு துணியால கட்டிட்டான்..

ரொமான்டிக்கா எதாச்சும் பண்ண போறான்னு மட்டும் சத்தியமா நினைச்சிராதீங்க. கொலை பண்ணாம இருந்தா போதும்.

திரும்ப வண்டி எடுத்து ஒரு இடத்துல வண்டி நின்னதும் என்ன இறக்கி கூட்டிட்டு போனான். எங்க இருக்கோம்னு எனக்கு தெரியக்கூடாதாம். கேடி.

ஒரு வீட்டுக்குள்ள போனதும் கண்ண திறந்து விட்டான். சின்னதா அழகா இருந்துச்சு அந்த இடம்.

" இது என்ன இடம்?? என்ன எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த??"- நான்

" ஆமா இவ பெரிய அழகி.. அப்டியே ஹனிமூண் கூட்டிட்டு வந்திருக்கேன் பாரு. இங்க தான் இனிமே நாம இருக்க போறோம். நீ யாருகிட்டையும் ஃபோன் பேசகூடாது. பக்கத்துல யார்ட்டையும் பேசகூடாது."

" டேய்.. நா எதுக்கு நீ சொல்லுறத கேக்கனும். என்ன ஒழுங்கு மரியாதையா வீட்டுல கொண்டு போய் விடு.. இல்லனா நடக்குறதே வேற.."

" இல்லன்னா .... ??? இல்லனா என்னடீ பண்ணுவ?? இன்னில இருந்து நீ என் பொண்டாட்டி . நான் சொல்றபடி கேக்கனும் . இல்லன்னா உங்கப்பனுக்கு கொல்லி போட்டுறுவேன். "

" சும்மா சும்மா அத சொல்லியே பயமுருத்தாத.. எனக்கு ஒன்னு மட்டும் புரில.. என்ன எதுக்குடா கல்யாணம் பண்ணி.. என் வாழ்க்கைய நாசம் பண்ண??"

காதலில் விழுந்தேன்!!Where stories live. Discover now