73

3K 142 16
                                    

மதி:

" என்ன விட்டு அவ்வளவு சீக்கிரம் போயிடலாம்னு நினைச்சியா??" மதன்.

" நீ அடிக்கடி சொல்லவல்ல மதி.. நான் கோழை எதையும் ஃபேஸ் பண்ண தெரியாதவன்னு.. ஆனா எனக்கு அதோட அர்த்தம் இப்பத்தான் மதி புரியுது. உன்ன அந்த இடத்துல விட்டுக்குடுத்திருக்க கூடாது. என்ன மன்னிச்சிருமா .. ப்ளீஸ்.. "

அரைமணி நேரமா கத்திட்டு இருக்கான். ஆனா எனக்குத்தான் ஏனோ பயமா இருக்கு. செல்வம் எப்படி வேண்டும்னாலும் பிரச்சனை பண்ணுவான்.

சாரா சொல்ற பதிலும் என் மண்டைக்குள்ள ஊற மாட்டேன்குது.

" ப்ளீஸ்.. மதி.. "வேகமா கதவ தட்டினான்.

ஆமா. அவனையும் சாராவையும் வெளில வச்சி பூட்டிட்டேன்.

" மதியழகி.. "

அவன் ஒவ்வோரு தடவையும் அந்த அழகிங்குற வார்த்தைய அழகா சொல்லுவான். இப்பவும் அத ரசிச்சேன். ஆனா இனி ரசிக்க முடியாதோங்குற பயம் முன்னாடி வந்து நின்னுச்சு.

ஒரு ரெண்டு நிமிஷம் அமைதியா இருந்துச்சு வெளில.. என்னன்னு நான் கிரகிக்கிறதுக்குள்ள..

" சாரா.. சாரா.. கண்ண திற " மதன ஓட அலறல் கேட்டுச்சு.

அவ கர்ப்பமா இருக்காங்குறதையே நான் மறந்துட்டேன். ஐயோ கடவுளே!!!

வேகமா தண்ணி எடுத்திட்டு போய் கதவ திறந்தேன்.

அத தான் எதிர்பார்த்தது போல மதன் திரும்ப நான் கதவ மூட முடியாத படி ரெண்டு கதவுலையும் கைய வச்சிட்டு நின்னுட்டான்.

பின்னாடி அவன் தங்கச்சி(சாரா @ நாடகக்காரி) நிக்கிறா..

எனக்கு எதுமே பேசனும்னு தோணல..

" ம்ச்.. மதன் உன்மேல எனக்கு எந்த கோவமும் இல்லை.. நாம சேரனும்னு விதி இல்லை போல.. " மதி.

என்னால அழுகைய அடக்கு முடியல..

அவன்கிட்ட போய்..
" என்ன கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பாயா??

ஏன்னா இத கேக்க வேண்டிய அவசியம் இன்னிக்கு வரைக்கும் ஏற்படல.. ரெண்டு பேர் லவ் பண்ணா மட்டும் அத காதலாயிடாது.

காதலில் விழுந்தேன்!!Where stories live. Discover now