" வீட்டுக்கு போனதும் ஃபோன் பண்ணுன்னு சொன்னேன்ல. " சூர்யா.
" நான் இன்னும் போகலங்க. மதன் வர்றேன்னு சொன்னான். வீட்டுக்கு போனதும் கால் பண்றேன். டாடா"
அத்தை கூட இருக்கிறதுனால மதன் ஆட்டோ எடுத்திட்டு வந்தான். அத்தைய வீட்டுல இறக்கிட்டு நான் அவன் கூட போனேன். போற வழியெல்லாம் புலம்புறான்.
" சின்ன பொண்ணு டா. பொறுமையா பேசனும். புரிஞ்சிப்பா.. விடு. "
உங்க யாருக்கும் புரிலன்னு ஐ நோ.. சோ நானே சொல்லிர்றேன்.
செல்வம் எங்ககிட்ட சொல்லிட்டு போனத நாங்க யாரும் பெருசா எடுக்கல. ஆனா அதன் அர்த்தம் இப்பத்தான் புரிஞ்சிருக்கு.
அதுங்குள்ள வீட்டுக்கே வந்துட்டேன்.
" யாராச்சும் என்கிட்ட வந்தீங்கனா.. நான் இத ஊத்தி பத்த வச்சிப்பேன். " சுவாதி.
எனக்கு பக்குன்னு ஆயிடுச்சு..
" சுவாதி நான் சொல்றேன்ல தயவு செஞ்சு கேளு. அவன் நல்லவன் இல்லடீ. "மதி
" எனக்கு அதெல்லாம் தெரியாது . அவர கல்யாணம் பண்ணி வைப்பீங்களா மாட்டீங்களா???"
"முடியாது. " மதி ரொம்ப கராரா சொன்னதும்..
" அப்ப என்கிட்ட அன்பா பேசினதெல்லாம் சும்மா தானே. உங்க வாழ்க்கைக்கு ஒரு பிரச்சனை வந்ததும் என்ன பத்தி கவலை இல்லையில யாருக்கும். அவர் உண்மையிலே நீங்க கஷ்டப்பட கூடாதுன்னு சொல்றாரு" சுவாதி.
இத எங்க ஆரம்பிச்சு.. எங்க முடிக்கிறதுன்னு எனக்கு நிஜமா தெரில.
" சுவாதி .. நீ இவ்வளவு இம்மெட்சூர்டா பிகேவ் பண்ணுவன்னு நினைக்கல. உன்ன கல்யாணம் பண்ணி கொடுத்தாலும் அவன் நல்லா வச்சிக்க மாட்டான் டா. உங்க அண்ணன எவ்வளவு கஷ்டபடுத்திருக்கான்னு பார்தீல.??"- நான். என் பங்குக்கு நானும் பேசினேன்.
ஆனா அவ பிடிச்ச பிடில பிடிவாதமா நின்னுட்டு இருந்தா.
மதி போலிஸ்ல போய் கம்ப்ளெயின் பண்ண அடுத்த ஒரு வாரத்திலையே இந்த பிரச்சனை ஸ்டார்ட் ஆகியிருக்கு.
YOU ARE READING
காதலில் விழுந்தேன்!!
Teen Fictionநாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. ப...