70

3.6K 150 23
                                    

" அவங்க ரொம்ப பர்ஃபக்ட் ஆ இருக்காங்க. ஹாப்பியா வச்சிக்கோங்க. ஹெல்தியா சாப்பிடனும் அவ்வளவு தான்.நத்திங் மோர் தான் தட். " டாக்டர்

ஆமாங்க.. டாக்டர் ட செக் அப்க்கு போயிருந்தோம்.

வீட்டுக்கு வர்ற வழிலையே ஒரு பழக்கடைக்கு தேவையான பழங்கள அள்ளிபோட்டார்.

"சைட்பிஸ்னஸ் ஆ??"- நான்.

"இது ஒரு வாரத்துக்கு மட்டும் தான். "சூர்யா

😦😦😦

" இதெல்லாம் விடுங்க.. நான் உங்கள்ட்ட ஒன்னு கேப்பேன். வாங்கி தருவீங்களா??"சூர்யா

" எஸ் பேபி.. " சூர்யா.

"எனக்கு ஒரு சுடிதார்  வாங்கி தாங்க. "நான்.

" இது சாரதா தானா??? ஆச்சரியம் ஆனால் உண்மை"- சூர்யா.

" என்னங்க??"

" இல்ல டீ கருவாச்சி கல்யாணத்துக்கு அப்புறம் சுடி போட மாட்டேன்னு சொன்னியே .. இப்ப கேக்குற புதுசா??"

" வாங்கி தருவீங்களா மாட்டீங்களா???"நான்

" உத்தரவு மகாராணி அவர்களே!!"

அவரே ஒரு டிரெஸ் செலக்ட் பண்ணார். டாக்டர் பார்க்க பர்மிஷன் வாங்கிட்டு 6 மணிக்கு வந்தார். இப்ப மணி 9 ஆயிடுச்சு.

" சாப்பிட்டு போலாமா??"- நான்.

" வீட்டு சாப்பாடு தான் .. "

" அய்யோ.. நாளைக்கே புள்ள பிறக்க போற மாதிரி ரியாக்ட் பண்ணாதீங்க.. "

"நீ என்ன வேண்டும்னாலும் சொல்லிக்கோ.. இப்ப வண்டியில ஏறு."

வீட்டுக்கு போனோம்.
.
.
.
" அம்மா.. நீ எப்ப இங்க வந்த??"- சூர்யா
அவங்க அண்ணாவும் வந்திருந்தாங்க.

" ஆமா.. அவளுக்கு பிள்ளை பிறக்குறவரைக்கும் நீ மட்டும் தனியா எல்லா வேளையும் செய்வ.. உன்னை யாரு பார்த்துப்பா??அதான் நானே வந்தேன். "அத்தை

எல்லாரும் சிரிச்சிட்டோம்.

" ஊரே சிரிக்கிது.  நீங்களும் சிரிங்க.. நல்லா சிரிங்க டா. "

காதலில் விழுந்தேன்!!Where stories live. Discover now