" சாரா.. ப்ளீஸ் என்ன மன்னிச்சிரு. இனி உன்ன எப்பவும் ஏமாற்றமாட்டேன்.. நாம இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம். வா"
விக்கி." தாங்க்ஸ் விக்கி.. இப்பவாச்சும் என்ன புரிஞ்சிக்கிட்டியே!!நீ இல்லாம நான் எப்படி இருக்கபோறேன்னு நினைச்சு நினைச்சு பயந்துட்டே இருந்தேன் டா. கடவுளே!! ரொம்ப நன்றி"
என் பக்கத்துல வந்து கைய புடிச்சான்.. அவன் நெஞ்சுல வச்சு.
ஐ லவ் யூ சாரதா!!
சட்டுன்னு என்ன யாரோ அவன்கிட்ட இருந்து புடிச்சு இழுத்தாங்க. அச்சச்சோ வில்லன் யாரோ வந்துட்டாங்க போல..
இல்லங்க வில்லி.
ஒன்னும்புரியலையா??
விக்கிகூட நான் கனவுல கூட சேரகூடாதுன்னு நினைக்கிற பற்பல ஜீவன்கள்ள மதியும் ஒருத்தி.. தூக்கத்துல எழுப்பிட்டாங்க..
"விக்கி என்ன விட்டு போயிராதடா.. ப்ளீஸ்.." கத்திட்டே எழுந்தேன்..
" அடியேய்.. யாருடீ விக்கி??"
அப்பத்தான் இதெல்லாம் கனவுன்னு எனக்கு புரிஞ்சது.எதும் சொல்ல தோனல.. திரும்ப கத்துனா.
" சாரதாஅஅஅஅ.."
" ம்ம்ம் .. சொல்லு மதி.. எதுக்கு டீ இவ்ளோ சீக்கிரம் எழுப்பிவிட்ட??"
" சீக்கிரமா?? மணி 7 ஆயிருச்சு டீ. வேலைக்கு போக வேண்டாமா??அது சரி.. விக்கி யாரு?? என்ன பிணாத்திக்கிட்டு இருந்த??"
இத பத்தி பேச ஆரம்பிச்சா இவள்ட்ட மாட்டிப்பேன். பேச்ச மாத்தியே ஆக வேண்டும் சாரா..
" இன்னிக்கு முதலாளி அம்மா ஊர்ல இல்ல டீ.. அதனால வர வேண்டாம்னு சொல்லிட்டாங்க. நான் தூங்குறேன். என்னை 10 மணிக்கு எழுப்பி விடு.."
போர்வைய இழுத்து போத்திட்டு தூங்குறமாதிரி நடிக்க ஆரம்பிச்சேன்.
" சாரா.. நீ இன்னும் விக்கி யார்னு சொல்லவே இல்ல "- மதி.
"அது... மதி... நான் லவ் பண்ண பையன் டீ.. "
YOU ARE READING
காதலில் விழுந்தேன்!!
Teen Fictionநாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. ப...