" ஹலோ!" "ஹலோ"லைன்ல மதன் கத்திட்டு இருந்தான்.
" ஹே மதன்! நான் சாரதா பேசுறேன்.! "
" நீயா ?? சொல்லு சாரா.." கொஞ்சம் சலிப்புடன் தான் சொன்னான்.
" வேற யாரையாச்சும் எதிர் பார்த்தியா என்ன??"
" ம்ச்.. இப்படி மொக்கை போடுறதுக்குத்தான் கால் பண்ணியா சாரா??"
பாவம். துயரத்தின் நுனியில இருக்கான் போல..
" ஹே லூசு.. ஏன் இவ்ளோ சோகமா பேசுற??தூங்கலையா??"
" இல்ல மதி... ம்ச் சாரி சாரா"
" எப்பபார்த்தாலும் அவ நினைப்பாவேவாடா இருப்ப??"
" என்ன பண்ணுறது சாரா!! லவ் பண்றதோட வேதனை உனக்கு புரியாது.. அதும் ஒன் சைடு.. "
எனக்கு தெரியாதா??
எட்டு வருஷம்..எட்டு வருஷம் .. நான் பட்ட அவஸ்தை அந்த சாமிக்குக்கூட தெரியுமான்னு எனக்கு தெரில..
ஹா ! ஹா!!!
" என்ன சாரா சிரிக்கிற??என் நிலைமைய பார்த்தா சிரிப்பா வருதுல உனக்கு."
" டேய்...முதல்ல இப்படி பேசுறத நிப்பாட்டு.. ஒரே ஒரு உண்மேய சொல்லட்டா?? நீ ஒரு மிகப்பெரிய கேனை!!"
" சாரா!!!!...." கத்துனான்..
" டென்ஷனாகாம.. முதல்ல கேளு..உன்ன லக்கின்னு சொல்லுறதா?? இல்ல அன்லக்கின்னு சொல்லுறதான்னு தெரில மதன்.."
" சாரதா! எனக்கு டென்ஷன் ஏத்தாத.. "
மதி கூட அடிக்கடி என்ன திட்டுவா.. டைரக்டா பேசுன்னு..
இதுக்குமேல அவன கடுப்பேத்தகூடாது.." பின்ன என்ன டா?? அவளே வந்து ரெண்டு நாள் மூன்னாடி காலைல பைக்ல கூட்டிட்டு போக சொன்னாலாம்ல.. இவரு பெரிய நல்லவர். வேலை இருக்குன்னு சொன்னியாமா??"
" மதி சொன்னாலா?? ....டக்குன்னு கேட்டதும் எனக்கு பயமா இருந்துச்சு . அதான் அப்படி சொன்னேன்"- மதன்.
" அவ சொன்னதும் கரக்டு தான்.."
" என்ன சொன்னா சாரா??"
YOU ARE READING
காதலில் விழுந்தேன்!!
Teen Fictionநாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. ப...