21

3.9K 134 2
                                    

" இல்ல டீ.. அவன்.."

மதியின் கூற்று:

சாரா வெளிய போனதும் மதன்க்கு ஃபோன் பண்ணலாம்னு ஃபோன எடுத்தேன். ராஜி கால் பண்ண நம்பர்ல இருந்து கால் வருதே!! இப்ப யாருன்னு தெரிலையே!!!!

ஃபோன் அடன்டு பண்ணிட்டு நானும் பேசல.. ஆப்போசிட் சைட்லையும் யாரும் பேசல.நானே ஸ்டார்ட் பண்ணேன்.

"ஹலோ"

"ராஜி ஃபிரன்ட் தானே??"

"ஹே.. ஏன்பா அவள இப்படி கொடுமை படுத்துறீங்க??ப்ளீஸ் அவள விடுங்க."

" கல்யாணம் பண்ணிட்டேன் . இனிமே எப்படி விட முடியும்.லுக் அவ என் மனைவி. நான் பார்த்துக்குறேன். நீங்க பயப்படாம இருங்க"

ரொம்ப நல்லவனா பேசுறானே??? உண்மையிலே இவன் கெட்டவனா?? இல்ல நல்லவனா??

"உங்கள அவளுக்கு புடிக்கல.. அவ எப்படி உங்ககூட சந்தேஷமா இருப்பா??அதும் இல்லாம.. நீங்க.. நிறைய பொன்னுங்கள்ட்ட... ம்ச்.. நிறைய பொண்ணுங்கள்ட்ட பேசுறீங்கன்னு வேற சொல்லிருக்கா.ஆனா அவ அப்படி இல்ல.."

"என்ன பத்தி இதோல்லாம் சொல்லிருக்காலே!! அவள பத்தி எதாச்சும் சொன்னாலா?? சொல்லிருக்க மாட்டா. எனக்கு தெரியும். ரொம்ப தைரியம் னு அவளுக்கு நினைப்பு."

"என்ன உளறீங்க?? அவள பத்தி எங்களுக்கு எல்லாம் தெரியும். "

"ஓஓஓ.. அப்ப அவ லவ் பண்ணது உங்களுக்கு தெரியுமா??"

ராஜி.. லவ் பண்றாளா??? கண்டிப்பா இருக்காது... எங்ககிட்ட சொல்லாம அவ எதும் மறைக்க மாட்டா..

"நீ சும்மா பொய் சொல்லாத. எப்பவும் எங்ககூட தான் இருக்கா.. பின்ன எப்படி???"

"10 மணி வரைக்கும் தான் உங்ககூட இருக்கா.. ஹாஸ்டல்க்கு 11 மணிக்கு தான் போறா.. அது தெரியுமா உங்களுக்கு??ஏதோ அவள பத்தி தெரியும்னு சொன்னீங்ளே.. அது இது தானா??"

ம்ச்.. அவள பத்தி ரொம்ப தெரிஞ்சிக்காம விட்டுட்டோம்.

எப்பபார்த்தாலும் மதன பத்தியே நினைச்சா இப்படி தான் நடக்கும்.

காதலில் விழுந்தேன்!!Where stories live. Discover now