38

3.8K 153 17
                                    

"சார்...சார்... லைன்ல இருக்கீங்களா??."-நான்

"ம்ம் சொல்லு சாரதா!!"-சூர்யா

"உங்க கேள்விக்கான விடையெல்லாம் கிடச்சிருச்சா சார்?"

"ம்ம்.. "

"ஐய்யோ சார் மணி 1 ஆச்சு. தூக்கம் வரலையா??"-நான்

"உனக்கு எப்படி சாரதா தூக்கம் வருது??

"பழகிருச்சு சார்"

"திரும்ப உங்க வீட்டுக்கு போகலாம்ல.??"

"அது சரியா இருக்காது சார்."

"ஒருவேலை விக்கி இந்த முறையும் உன்ன லவ்  பண்றேன்னு சொன்னா என்ன பண்ணுவ??"

"சார்.. இவ்ளோ சொன்னதுக்கு அப்புறமும் இப்படி ஒரு கேள்வி கேக்குறீங்களே!! கண்டிப்பா ஒத்துக்கமாட்டேன் சார்"

"ஏன் அந்த கடையில வர்க் பண்ணிட்டு இங்க வந்து வீட்டு வேலைய பார்த்திட்டு கஷ்டபடுற??"

"என்னால அவன மறந்திட்டு வாழ முடில  சார்.அதான் இப்படி பண்ண வேண்டியதா போச்சு. எங்க வீட்டுல அவன நான் 12த்துலையே மறந்திட்டதா நம்புறாங்க. இப்ப போய் நான் திரும்ப அவன தேடி போனேன்.திரும்பவும் என்ன ஏமாற்றிட்டான்னு சொன்னா எங்க அம்மா ரொம்ப கஷ்டபடுவாங்க. நான் அங்க இருந்தா எல்லாருக்கும் கஷ்டம் சார்."

"நான் ஒன்னு சொன்னா கோவிச்சுக்கமாட்டியே!!"-சூர்யா

"சொல்லுங்க சார்"

"உன்ன மாதிரி ஒரு முட்டாள நான் பார்த்ததே இல்லை சாரதா.அவன் முன்னாடி நல்லா வாழ்ந்து காட்டனும்னு நினைக்காம ... லூசு"

"சார் .. உங்களுக்கு புரியல.. அவன என்னால மறக்க முடில. நான் என்ன பண்ணாலும் எல்லாத்துலையும் அவன் கூட பேசின வார்த்தைகள்... இது தான் நியாபகம் வந்துச்சு."

"எனக்கு கோவம் கோவமா வருது நீ பண்றத பார்த்தா!! கவிதா மேலையும் எனக்கு இதான் கோவம் . ஏமாத்துனவங்கள பத்தி மட்டும் தானே யோசிக்கிறீங்க. உங்கள சுத்தி உங்களுக்காக இருக்கவங்கள பத்தி ஒரு நிமிஷம் யோசிச்சு பாத்தியா??"

காதலில் விழுந்தேன்!!Où les histoires vivent. Découvrez maintenant