29

3.7K 142 12
                                    

      கடைக்கு போறத நினைச்சா பயம் வந்திருச்சு. உள்ள போனதும்.மதன கூப்பிட்டேன்.

     "மதன் எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா??"

    "சொல்லு சாரா..."

    "இல்ல டா.. இன்னிக்கும் விக்கி வருவான். இல்லனா கால் பண்ணுவான். அதனால நான் ஃபோன உன்கிட்ட குடுத்தர்றேன். நான் மாடிக்கு போறேன். அவன் வந்து தேடுனா விட்ரு. கால் பண்ணா.. ராங்க நம்பர் மாதிரி பேசிரு. "

     "அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் .நீ இங்கையே இரு. அவன் என்ன பண்ணிறான்னு பார்க்குறேன். "

    "அட லூசு பயலே!! அவன் வீட்டுல சொல்லிருவான் டா. கொஞ்ச நாள் போகட்டும் .பார்த்துக்குறேன். "

    "நான் சொல்லுறதையே கேட்காத!!  நெட் வச்சிருக்கியா??"

    "எதுக்கு டா??"

    "என் ஆள் கூட கொஞ்ச நேரம் நானும் கடலை போடுவேன்ல. "

    "நானும் பார்க்குறேன் . இப்படி எத்தனை நாள் தான் ஒளிஞ்சி விளையாட போறீங்கன்னு. "

    "சீக்கிரம் ஆட்டத்து முடிச்சிரலாம்"
-மதன்.

    "நல்லா இருந்தா சரி தான். "

     நான்  மாடிக்கு கிளம்பிட்டேன் .கணேஷ் சார் வேகமா வந்தாரு. இன்னிக்கு என்ன ஆச்சுன்னு தெரியிலையே!!

    "சாரதா.. உனக்கு இருக்க திமிரு!!"-கணேஷ் சார்

    " நான் என்ன சார் பண்ணேன்??"

    "உன்ன பார்க்க யாரும் வர்கூடாதுன்னு சொல்லியும் ஒருத்தனா என்கிட்ட வந்து சாரதா இருக்காங்களான்னு கேக்குறான். நீ வர்றியா போறியான்னு பார்க்குறது தான் என் வேலையா?? "

     என் வேலைக்கு உலை வைக்கிறதே இவன் வேலையா போச்சு.

    "அது..நான் வர சொல்லல .. சாரி சார்."

     "எனக்கு வந்த கோவத்துக்கு , அவ நேத்தே வேலைய விட்டு நின்னுட்டான்னு சொல்லிட்டேன்."

    தெய்வம் சார் நீங்க.!!! தெய்வம்

    "ரொம்ப சாரி சார். இனிமே வர மாட்டான் ."

காதலில் விழுந்தேன்!!Where stories live. Discover now